தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினம் இன்று 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.
30ஆவது வீரமக்கள் தினத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்றுகாலை 9.30அளவில் (13.07.2019) வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. முதலில் செயலதிபரின் நினைவில்லத்தில் மௌன அஞ்சலி இடம்பெற்று, செயலதிபரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more
யாழ். சுன்னாகம் கிழக்கு அலட்டன் வைரவர் கோயில் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2019) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.
யாழ். மானிப்பாய் முகாந்தரம் அவினியூவின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2019) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
யாழ். மானிப்பாய் பெக்கஸ் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2019) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
யாழ். சுன்னாகம், கந்தரோடையில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும், நீர்வேலி கிழக்கு பன்னாலைப் பிரதேச இளைஞர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றுகாலை நடைபெற்றது.