தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் இந்து ஆலயங்கள், இந்து அறநெறிப் படசாலைகள் என்பவற்றை வலுப்படுத்தும் தெய்வீகச் சேவைத் திட்டத்தின் ஊடாக இந்து ஆலயங்களிற்குப் புனரமைப்பிற்கான நிதி வழங்கும் நிகழ்வு யாழ். நீராவியடி இலங்கைவேந்தன் மண்டபத்தில் இன்று (14.07.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், சைவப் பெரியார்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ் தேசியக் கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன்,பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அமைச்சின் கண்காணிப்பு  பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அமைச்சின் மேலதிக செயலாளர் ரவீந்திரன், இந்து சமய கலாசார அலுவலக திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.