Posted by plotenewseditor on 16 July 2019
Posted in செய்திகள்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (16.07.2019) பிற்பகல் 2.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை வவுனியாவில் நடைபெற்றது.
இதன்போது கட்சியின் இன்றைய அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், எதிர்வரும் தேர்தல்கள் என்பன குறித்து கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் விளக்கிக் கூறினார். இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்கள். மேற்படி கூட்டத்தில் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், பொருளாளர் க.சிவநேசன், உப தலைவர்கள் ஜி.ரி. லிங்கநாதன், பொ.செல்லத்துரை மற்றும் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களும், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more