புளொட் அமைப்பின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் கார்த்திகேசன் நந்தகுமார் அவர்கள் தனது ஆடி மாதத்திற்கான மாதாந்த கொடுப்பனவு தொகையான 15 000/- ரூபாவினை வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் முன்பள்ளியின் மின் இணைப்பிற்காக புளொட்டின் 30வது வீரமக்கள் தினத்தினை முன்னிட்டு வழங்கியிருந்தார்.
முன்பள்ளி ஆசிரியர்களான செல்வராஜா டினோஸா, விஜிந்தன் நீரஜா ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் வவுனியா நகர சபை உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் யோகராஜா, Read more
சுவிஸ்லாந்தில் கழகத் தோழர் சிவாவின் முயற்சியில் கழகத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட உள்ளுரர் தபால் பாவனைக்கான தபால்தலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
திருகோணமலை கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு பௌர்ணமி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை (16) வழிபடச் சென்ற பக்தர்கள்மீது இனந்தெரியாதவர்கள் தேநீர் சாயங்களை ஊற்றிய சம்பவம் தொடர்பில் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழிநீர் அஞ்சலி!
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில் பிரான்ஸில் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.