தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைவரும் யாழ். கிளிநொச்சி மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. Read more
1. மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால விடுமுறையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகள் ஜூலை 27ம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், குறித்த வாரத்தில் தரம் 11, 12, 13 ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், ராஜாங்கனை, வெலிகந்த கல்வி பிரிவுகளில் எந்த பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (16.07.2020) வியாழக்கிழமை மாலை 4.30அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்)அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
31ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2020) வியாழக்கிழமை காலை 9.00மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தலைமைக் காரியாலயத்தில், கட்சியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
மக்களால் போற்றப்பட்ட புளொட் அமைப்பின் வன்னி மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் தோழர் வசந்தன் (சரவணபவானந்தம் சண்முகநாதன்) அவர்களின் 22 வது நினைவஞ்சலி நிகழ்வு 15/07/2020 அன்று தோழர் படுகொலை செய்யப்பட்ட நினைவிடத்தில் தோழர்களால் நினைவுகூரப்பட்ட வேளையில்.
மட்டக்களப்பு நாவற்குடாவில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் காரியாலயத்தில் இன்று (15.07.2020) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் புளொட்டின் 31வது வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் இன்று முற்பகல் 10.00 மணியளவில் கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை குரும்பகட்டி பகுதிகளில் தேர்தல் பரப்புரைகள்…