பாராளுமன்ற தேர்தல் – 2020- தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்.
#யாழ்_மாவட்டம்

(யாழ்ப்பாணம்,கிளிநொச்சி)
தர்மலிங்கம் சித்தார்த்தன் – இலக்கம் 6 ,
பாலச்சந்திரன் கஜதீபன்- இலக்கம் 7
#வன்னி_மாவட்டம்(வவுனியா, மன்னார், முல்லைத்தீவு)
கந்தையா சிவலிங்கம் – இலக்கம் 4 ,
ஜி.ரி.லிங்கநாதன்-இலக்கம் 5
#மட்டக்களப்பு_மாவட்டம்
மு.ஞானப்பிரகாசம் – இலக்கம் 7
இம்முறை பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இன்று நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் வேட்பாளர்களும் தமது பிரசார நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் தினமிரவு வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய மேலும் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு கிழக்கு முனைய செயல்பாடுகளை வெளிநாட்டிற்கு ஒப்படைக்கக் கூடாது என்று கோரி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த பணி புறக்கணிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ குருணாகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேசம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் நேற்று கித்துள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் (28-வயது) என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.