கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தொழில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் விவரம் அரசாங்கத்தால் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 15 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு திருகோணமலை வீதி மாங்கேணி பிரதேசத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மாங்கேணியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். பண்ணை மீனாட்சிபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் எச்சங்கள் தொடர்பான அகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் அகழ்வின் போது, பெண்ணின் கால் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 79 பேர், பூரணமாக குணமடைந்து இன்று தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 305 இலங்கை பிரஜைகள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.