20 ஆவது திருத்தம் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். இன்று நடைபெற்ற S.W.R.D.பண்டாரநாயக்கவின் 61 ஆவது நினைவு தின நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். S.W.R.D. பண்டாரநாயக்கவின் 61 ஆவது நினைவு தின நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஹொரகொல்லவிலுள்ள பண்டாரநாயக்கவின் நினைவிடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வின் பின்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் பண்டாரநாயக்கவின் கொள்கைகள் தொடர்பான கருத்தாடல் ஏற்பட்டது.