Header image alt text

திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எரிபொருள் கப்பலில் உள்ள பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த கப்பலில் இருந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டமை அடையாளம் காணப்பட்டதையடுத்து, அனைத்து ஊழியர்களுக்கும் பீ.ஆர்.சி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. Read more

தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியாகிய டிப்ளோமாதாரிகளின் நியமனம் தாமதமடையும் எனத் தெரியவருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதமளவில் வழங்கப்படும் இந்நியமனம் இவ்வருடம் நவம்பர் மாதத்தைக் கடக்கும் எதிர்வு கூறப்படுகிறது.. இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்த போதிலும், கற்பித்தல் பயிற்சி தொடர்பான இறுதிப் பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாத காரணத்தினாலேயே இந்நியமனம் தாமதமடையும் என தெரியவருகிறது. Read more

சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனை குறைப்பதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதற்கமைய, வழங்கப்பட்ட புள்ளிகள் பூஜ்சியம் வரை குறைவடையுமாயின் அவ்வாறானவர்களின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற போது, மயங்கி விழுந்து குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ் தொண்டைமானாறு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தொண்டைமானாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் (வயது-35) 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று வவுனியா செட்டிகுளத்தில் அமைந்துள்ள சமூக விதை வங்கிக்கு விஜயம் செய்திருந்தார். சமூக விதை வங்கியின் ஊடாக செட்டிகுளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன் நாட்டின் பசுமை செயற்றிட்டத்திற்காக பங்களிப்பு செய்த பயனாளிகளுக்கு சமூக விதை வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சான்றிதழும் பணப்பரிசும் வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார். Read more