Header image alt text

MCC ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். இலத்திரனியல் ஊடக செய்திப் பிரிவு தலைவர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களை சந்தித்தபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பில் 20 ஆவது திருத்தம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது. Read more

பாராளுமன்றத்தில் குழுநிலை சந்தர்ப்பத்தின் போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில், ஆளும் தரப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியர்கள் குழாம் பரிசீலிக்கின்றது. Read more

கண்டி பூவெலிகட சங்கமித்தா வீதியிலிருந்த ஐந்து மாடி வீடொன்று கடந்த வாரம் தாழிறங்கியதில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டின் உரிமையாளரான அநுர லெவ்கே, பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார். Read more

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,374ஆக அதிகரித்துள்ளது.

தெரிவுக்குழு கூட்டத்தின் போது அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய 53 திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றத்தை ஒருவருடத்தில் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டரை ஆண்டுகளின் பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more