Header image alt text

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டீ.டெப்லிட்ஸ் ஆகியோருக்கிடையில் சபாநாயகர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமெரிக்க முகவர் நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Reid Aishiman உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் சீன தூதரகத்தின் முதலாவது செயலாளரான சுயn ஓழைபெ ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நீதியமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் அபிவிருத்திக்காக சீன அரசினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பிலும், நாட்டின் நீதித்துறை கட்டமைப்பின் அபிவிருத்திக்காக சீன அரசினால் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், Read more

மாகாண சபை முறைமையை ஒழிப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாண சபைச் செயலாளர்கள், ஆணையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்படி விடயங்களை தெரிவித்துள்ளார். மேலும், மாகாண சபை முறைமையூடாக இறந்த நபரொருவருக்கான இறுதி கிரியைகளை செய்வதற்கான முற்பதிவுகளை இணையத்தினூடாக செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் அறிவுருத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிறைப்பட்டு கிடந்த 30 ஆயிரத்துக்கும் அதிமானவர்கள் நாட்டுக்குள் அழைத்துவரப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா, அவர்கள் சகலரையும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். Read more

நாட்டில் இதுவரை 3,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 05 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கு நாட்டில் இதுவரை 2,64,343 PRC சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக Covid-19 ஒழிப்பிற்கான தேசிய செயலணி அறிவித்துள்ளது. நேற்று மாத்திரம் 1,760 PRC சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, கந்தக்காடு மற்றும் சேனபுர தனிமைப்படுத்தல் நிலையங்களில் இதுவரை 649 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை, காங்கேசந்துறை மற்றும் புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடலோர பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 60 தொடக்கம் 70 வரையில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மிக அவதானமாக செயற்படுமாறும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காணப்படுகின்ற இயங்குநிலை தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் காற்று நிலைமையும் மழையுடனான வானிலையும் இன்று மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயல் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை வயலில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ். மானிப்பாய் நவாலியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது 65) என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வயல் செய்துவரும் குறித்த வயோதிபர் நேற்று வயல் வேலைக்கு சென்றுள்ளார். Read more

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி திருப்பழுகாமம் பகுதி வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மேளவாத்திய கலைஞரான புவிதாசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு ஆலயம் ஒன்றுக்கு மேள வாத்தியம் இசைக்க சென்ற நிலையில் இன்று காலை தனது வீட்டின் முன்பகுதியில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு செங்கலடியில் நேற்றுமாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியகியுள்ளார். வேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக சென்றோரை மோதியுள்ளது. இதன்போது ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொம்மாதுறையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சிவசுப்பிரமணியம் ரமேஷ்குமார் (வயது-40) என்பவரே உயிரிழந்துள்ளார்.