Header image alt text

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற வை.ஐ.சி.ஏ.ஐ (YICAI) ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வட மாகாணம் முழுமையாக முடங்கியுள்ளது. கிழக்கில் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது

நாட்டில் இதுவரை 282,197 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக COVID – 19 ஒழிப்பு தேசிய படையணி தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் 1,410 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, இன்று (28) காலை வரை கந்தக்காடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது. Read more

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் சுஜியாமா அக்கீரா, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்துக்கு, நல்லெண்ண விஜயமொன்றை, இன்று (28) மேற்கொண்டு, நூலகத்துக்கு நூற் தொகுதியைக் கையளித்தார். நிப்பொன் பவுண்டேஷன் அமைப்பால் ‘சமகால ஜப்பானை அறிந்து கொள்ள நூறு ஜப்பானிய புத்தகங்களை வாசியுங்கள்’ எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமிடம் ஒரு தொகுதி புத்தகங்களை தூதுவர் சுஜியாமா அக்கீரா கையளித்தார். Read more

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய MT New Diamond கப்பலின் கிரேக்க நாட்டு கெப்டன் ´தீரோஸ் ஹீலியாஸ்´ இற்கு வௌிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே விடுத்திருந்த அழைப்பானையின் அடிப்படையில் குறித்த கெப்டன் இன்று இன்று காலை 9.30 க்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். Read more

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் குறித்து ஆய்வு செய்து கட்சிக்கு பரிந்துரைகளை வழங்க இலங்கை சுதந்திரக் கட்சியால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக நிமல் சிறிபால த சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவில் 10 பேர் உள்ளடங்குகின்றனர். Read more