Header image alt text

தனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்குவதற்கான முயற்சியாக 20 ஆவது திருத்தத்தை பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார். 19 ஆவது திருத்தத்தில் உள்ள ஜனநாயக அம்சங்கள் பலவற்றை இல்லாமலாக்குவதற்கான முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் சந்துருக்கொண்டான் சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபி அருகில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் இடம்பெற்றது. கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதி Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மறைந்த இராணுவத்தளபதி தோழர் மாணிக்கம் ராஜன் (மாணிக்கதாசன்) மற்றும் மறைந்த தோழர்கள் தர்மலிங்கம் தேவராஜா(இளங்கோ), முருகேசு குணரட்ணம்(வினோ) ஆகியோரின் 21ஆவது நினைவுதினத்தையிட்டு வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்களால் இன்று (09.09.2020) தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கப்பட்டது. Read more

நியு டயமண்ட் மசகு எண்ணெய் தாங்கி கப்பலில், மீண்டும் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை நிலைமைகளுக்கு மத்தியில், அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. Read more

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் இரண்டாவது நேர்முகத்தேர்வு இன்று நடைபெறுகின்றது. இதனடிப்படையில், முதலாவது நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட 20 கட்சிகளுக்கு இன்று இரண்டாவது நேர்முகத்தேர்வு இடம்பெறுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பதிவிற்காக விண்ணப்பித்த 159 புதிய அரசியல் கட்சிகளில், 20 கட்சிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. Read more

கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக, தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மாளிகாவத்தை, கொலன்னாவை, வெல்லம்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகள் இவ்வாறு நீரிழ் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்ததனால் இவ்வாறு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. Read more

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 77 இலட்சத்து 21,721 வரை அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 874ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான மரணங்கள் இந்தியாவில் பதிவானதோடு, அங்கு 1,107 பேர் குறித்த தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 89,852 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் நேற்று குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள காணியில் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது அப்பகுதியில் மரம் ஒன்றில் இருந்த குளவிகள் தாக்கியுள்ளன. இதனால் காயமடைந்த அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். Read more

வவுனியா கூமாங்குளம், 2ம் குறுக்குத் தெருவில் தூக்கிட்ட நிலையில் இளைஞன் ஒருவரது சடலத்தை நேற்று மாலை பொலிஸார் மீட்டுள்ளனர். ரஞ்சித் வசந் (22) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவியான நான்குமாத கர்ப்பிணி நெடுங்கேணி வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.