Header image alt text

20 ஆவது திருத்தம் குறித்து மேலதிக நடவடிக்கை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி விஷேட குழு ஒன்றை நியமித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக, Read more

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. குறித்த அரச வங்கிகள் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கள் மற்றும் பொதுமக்களினால் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சித்தாண்டி திருநாவுக்கரசு வீதியை அண்மையில் வசிக்கும் நாகராசா சதீஸ் (வயது 22) என்பவரே உயிரிழ்ந்துள்ளார். Read more

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் 7 நாட்களுக்குள் அதற்கான எதிர்ப்பு மனுக்கள் இருப்பின் அதனை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. உயர்நீதிமன்றத்தின் முன் அரசியலமைப்பிற்கு சவால் விடுவதே இதன் நோக்கம் என்பதுடன் அவ்வாறு அவ்வாறு சவால்கள் இல்லாவிடின் 20வது திருத்தம் 7 நாட்களுக்கு பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். Read more

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 09 பெண் மூத்த பெண் பொலிஸ் பரிசோதர்களின் பெயரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பரிந்துரைத்துள்ளதுடன், அதிலிருந்து ஒருவரை பிரதி பொலிஸ்மா அதிபராக தரமுயர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். Read more

கண்டி பூவெலிகடவில் தாழிறங்கிய ஐந்து மாடிக் கட்டடம், பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் தளர்வான மண் உள்ள பகுதியில் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான புவிசரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய தெரிவித்துள்ளார். பாரதத்தைத் தாங்க முடியாமையால் கட்டடம் தாழிறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். Read more

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரண்டாயிரத்துக்கு அதிகமான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இவ்வாண்டு ஆரம்பம் முதல் 2074 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வீதி ஒழுங்கு விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்படவோ, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவோ மாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் தண்டப்பணம் விதிக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வாகன நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. Read more

கொரோனா தொற்று காரணமாக இந்நாட்டிற்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 724 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவுஸ்திரேலியா, டுபாய், சென்னை மற்றும் ஜப்பானில் இருந்து குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இருந்து 288 பேரும், டுபாயில் இருந்து 420 பேரும், சென்னையில் 6 பேரும் மற்றும் ஜப்பானில் இருந்து 10 பேரும் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் மத்தள மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த புகையிரத்தில் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் வைத்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். மலையாளபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யுகேந்திரன் அஜந்தன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.