கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த குறித்த இரண்டு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியும், 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11 ஆம் திகதியும் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.