20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (20) அறிவித்தார்.இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது.

இதன்போது இது தொடர்பாக சபாநாயகர் தெரிவிக்கையில், அரசியல் யாப்பின் 121 -1 யாப்பிற்கு அமைவாக உயர் நீதி மன்றம் முன்னிலையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் என்ற திருத்த சட்ட மூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், எனக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

திருத்த சட்ட மூலம் அரசியல் யாப்பின் 82 – 1 யாப்பிற்கு அமைவானதாகவும், அரசியல் யாப்பின் 82 – 5 யாப்பிற்கு அமைய, விசேடமாக பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், திருத்த சட்ட மூலத்தின் 3, 5, 14 மற்றும் 22 சரத்துக்கமைவாக அரசியல் யாப்பின் 4 ஆவது யாப்புடன் 3 ஆவது யாப்பிற்கு அமைவானது என்றும் அரசியல் யாப்பின் 83 ஆவது யாப்பிற்கு அமைவாக, சர்வஜன வாக்கெடுப்பின் போது பொது மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், இருந்த போதிலும் 3 மற்றும் 14 சரத்துக்களில் உள்ள முரண்பாடுகள் உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழு திருத்தத்திற்கு அமைவாக திருத்தம் மேற்கொள்வது நீக்கப்பட வேண்டும் என்றும், 5 ஆவது சரத்தில் உள்ள முரண்பாடு உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள வகையில் பொருத்தமான திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் விலக்கிக்கொள்வதற்கு முடியும் என்றும் உயர் நீதி மன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.