கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் உள்ள வயோதிபர் இல்லத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானோரை, சிகிச்சைகளுக்காக அனுப்பியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வௌ்ளவத்தையில் இன்றும் 100 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் 300 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அத்தியட்சகர் கார்திகேசு ஶ்ரீபிரதாபன் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரில் 491 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,552 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் 36,049 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 8,332 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 165 ஆக பதிவாகியுள்ளது.