 2021ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 158க்கும் அதிக தொகுதிகளை கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய 10 வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கின்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
2021ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 158க்கும் அதிக தொகுதிகளை கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய 10 வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கின்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – 2021
திமுக – 158 இடங்களிலும்,
அதிமுக – 75 இடங்களிலும்,
மநீம – 1 இடத்திலும்
 
		     பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப் பகுதியில் இணையத் தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஈ தக்சலா, குருகெதர வேலைத்திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடைய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னரும் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். பாடவிதானங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத விடுமுறையை மட்டுப்படுத்துவது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. (அரசாங்க தகவல் திணைக்களம்)
பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப் பகுதியில் இணையத் தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஈ தக்சலா, குருகெதர வேலைத்திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடைய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னரும் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். பாடவிதானங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத விடுமுறையை மட்டுப்படுத்துவது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. (அரசாங்க தகவல் திணைக்களம்) வவுனியாவில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பம்பைமடு இராணுவமுகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 15 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை சேர்ந்த பலர் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு நேற்று (01) பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்ததுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
வவுனியாவில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பம்பைமடு இராணுவமுகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 15 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை சேர்ந்த பலர் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு நேற்று (01) பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்ததுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  திருகோணமலையில் உவர்மலை, அன்புவழிபுரம் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதிகள் நேற்று (01) முதல் முடக்கப்பட்டன. திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதன் காரணத்தால், நேற்று மாலை உவர்மலை பகுதியும், இரவு 7 மணியளவில் அன்புவழிபுரம், காந்தி நகர் ஆகிய பகுதிகளும் இவ்வாறு முடக்கப்பட்டன. சில தினங்களாக அன்புவழிபுரம், உவர்மலை ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் இப்பகுதிகள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் உவர்மலை, அன்புவழிபுரம் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதிகள் நேற்று (01) முதல் முடக்கப்பட்டன. திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதன் காரணத்தால், நேற்று மாலை உவர்மலை பகுதியும், இரவு 7 மணியளவில் அன்புவழிபுரம், காந்தி நகர் ஆகிய பகுதிகளும் இவ்வாறு முடக்கப்பட்டன. சில தினங்களாக அன்புவழிபுரம், உவர்மலை ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் இப்பகுதிகள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இராஜகிரிய மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இராஜகிரிய மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து பொது மக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து பொது மக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். கொழும்பு கொம்பனிவீதியில் உள்ள தபால் காரியாலயத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதனால், அந்த தபால் காரியாலயம் மூடப்பட்டுள்ளது.
கொழும்பு கொம்பனிவீதியில் உள்ள தபால் காரியாலயத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதனால், அந்த தபால் காரியாலயம் மூடப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி அன்னமலர் சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 5ஆம் திகதி முதல் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்கவுள்ளார். கடந்த நான்கு வருடங்களாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய இவர், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். இதுவரை வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக கடமையாற்றிய முத்து இராதாகிருஸ்ணன், யாழ் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் நிலையிலேயே, திருமதி அன்னமலர் சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி அன்னமலர் சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 5ஆம் திகதி முதல் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்கவுள்ளார். கடந்த நான்கு வருடங்களாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய இவர், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். இதுவரை வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக கடமையாற்றிய முத்து இராதாகிருஸ்ணன், யாழ் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் நிலையிலேயே, திருமதி அன்னமலர் சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை இடைநிறுத்தி வைத்துள்ளன. இந் நிலையில் இலங்கை அரசானது இந்தியாவுடனான விமான போக்குவரத்தில் மாற்றமொன்றினை ஏற்படுத்தி விமான சேவையைத் தொடரத் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளை தனிமைப் படுத்தும் கால அளவை ஏழு நாட்களிலிருந்து இரண்டு வாரங்களாக உயர்த்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இந் நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை’ இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருவதாலும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பது கொவிட் தொற்றாளர்களைக் கண்டறிய போதுமானதாக இருக்கும் என்பதாலும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் ‘ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை இடைநிறுத்தி வைத்துள்ளன. இந் நிலையில் இலங்கை அரசானது இந்தியாவுடனான விமான போக்குவரத்தில் மாற்றமொன்றினை ஏற்படுத்தி விமான சேவையைத் தொடரத் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளை தனிமைப் படுத்தும் கால அளவை ஏழு நாட்களிலிருந்து இரண்டு வாரங்களாக உயர்த்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இந் நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை’ இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருவதாலும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பது கொவிட் தொற்றாளர்களைக் கண்டறிய போதுமானதாக இருக்கும் என்பதாலும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் ‘ தெரிவித்துள்ளார்.  இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் பஸ் சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தூர இடங்களுக்கான பஸ் சேவைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ஏ.எச். பண்டுக்க சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார். இதனிடையே, நாளை (03) முதல் தனியார் பஸ் சேவைகளையும் 25 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் பஸ் சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தூர இடங்களுக்கான பஸ் சேவைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ஏ.எச். பண்டுக்க சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார். இதனிடையே, நாளை (03) முதல் தனியார் பஸ் சேவைகளையும் 25 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.