Header image alt text

ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, உக்ரேன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், உக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் “அமைதியாக இருங்கள். உக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என,  தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று ரஷ்ய அதிபர் விலாதிமிர் புடின் கூறியுள்ளார். இதேவேளை, உக்ரைன் இராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். Read more

நாட்டில் மேலும் 31 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,086 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் Read more

உக்ரைன் நாடு தழுவிய ரீதியில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்ரைன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ளடங்கும். Read more

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். Read more

ஊடகவியலாளர் மெலிசியா குணசேகரவின் கொலை தொடர்பில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. Read more

மார்ச் 2ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் ரவி குமுதேஷ், இன்று (23) தெரிவித்தார். Read more

வௌிநாடுகளுக்கு செல்வோருக்காக போலி PCR அறிக்கைகளை தயாரித்த மூவர்  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய, மினுவாங்கொடை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32, 33 மற்றும் 28 வயதான மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. Read more

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று (22) அறிவித்துள்ளார். Read more