ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்)சமூக மேம்பாட்டுப்பிரிவினால் லண்டன் கிளையைச் சேர்ந்த தோழர் முகுந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த தோழர் வெள்ளை (விஜேந்திரன்) இன் தாயாரின் மருத்துவ செலவுக்காக இன்று(03-01-2023)ம் திகதி பத்தாயிரம் ரூபாய்(10,000/-) நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் எதிர்வரும் 5 ஆம் திகதி காலை கட்சி ரீதியாக உறுப்பினர்களை சந்திக்கும் நோக்குடன்இ ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு நேரம் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன்பொருட்டு, மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகக் கூறினாலும், தேர்தலை தடுக்கும் உத்தரவினை கோரி ஓய்வு பெற்ற கேர்ணல் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
பாடசாலைகளில் தரம் 02 முதல் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்தல் புதிய பொறிமுறைக்குள் உள்வாங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.