Header image alt text

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும் தமிழ் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியில் நிர்ணயித்துக்கொள்வதை முன்னிறுத்தி சுதந்திரமான சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. Read more

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மத ஸ்தலங்களின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். Read more

இன்று (27) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.  அதற்கமைய,  அது தொடர்பான வர்த்தமானி அச்சீட்டு பணிகளுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. பெப்ரவரி 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. Read more

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்வதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கும் வரை, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Read more

பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியக சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டு சான்றுப்படுத்தினார். Read more