Header image alt text

மலர்வு – 06.05.1953
உதிர்வு – 02.01.1982
‘புதியபாதை’ ஊடாக தேசிய விடுதலைப் போராட்டத்தில் புதிய சிந்தனையை தந்த ஈழத்தின் ‘சே’, தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) அவர்களின் 41வது நினைவுதினம் இன்றாகும்.

Read more

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கு விண்ணப்பித்துள்ளார். முன்னதாக 2019ஆம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை துறந்தார். இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று கூறப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் இருந்து வெளியேறியபோது, எந்த நாடும் அவருக்கு புகலிடம் வழங்கவில்லை. Read more

அரச அதிகாரிகளுக்கு 4,000 ரூபா விசேட முற்கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று(02) ஆரம்பிக்கப்படவுள்ளது. அரச ஊழியர்களுக்கான இந்த விசேட முற்கொடுப்பனவு அடுத்த மாத இறுதி வரை வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த குறிப்பிட்டார். Read more

Online ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களுக்குள் 07 பதிவாளர் அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசிங்க குறிப்பிட்டார்.