Header image alt text

38ஆம் ஆண்டு நினைவுகள்!

Posted by plotenewseditor on 6 January 2023
Posted in செய்திகள் 

06.01.1985 இல் மன்னார் வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட பங்குத்தந்தை மேரி பஸ்ரியன் அடிகளார், ஜீவா, கட்சன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களின் 38 ஆம் ஆண்டு நினைவுகள்….

அவுஸ்திரேலியாவில்  புகலிடம் கோரி விண்ணப்பித்த 58 இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பரில் 1600-க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இலங்கை உள்ளது. Read more

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான தற்போதைய முன்னெடுப்புகள் தொடர்பில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மாணவர்கள் இணைந்து தங்களின் நிலைப்பாட்டை கூட்டு அறிக்கையாக வௌியிட்டுள்ளனர். Read more

கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கையர்; 38 பேர் இன்று முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2021 – 06 – 10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களுரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. Read more

உள்ளூராட்சிமன்றங்களைக் கலைப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கே காணப்படுவதாக தெரிவிக்கும் பிரதமர் தினேஸ் குணவர்தன, எவ்வாறாயினும் மார்ச் 18ஆம் திகதியுடன் தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் காலம் நிறைவடைவதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு எதிர்க்கட்சி எம்.பி முஜிபூர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more