எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் – டோனி பிளயருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

doni_pleyarஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானம் குறித்து முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளயருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் குறித்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், அரசியல் தீர்வுத் திட்டம், தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்குதல், காணாமல் போனவர்கள் போன்ற விடயங்கள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் அடிப்படையில் டோனி பிளயர் பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

எம்பிலிபிடிய மோதலில் 4 பொலிஸார் உட்பட ஏழ்வர் காயம்

 policeஎம்பிலிபிடிய புதிய நகர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் நான்கு பொலிஸார் மற்றும் மூன்று பொது மக்களும் காயமடைந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரை எம்பிலிபிடிய வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எம்பிலிபிடிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பீ.ஆர்.எஸ்.டப்ளியூ.பெரமுன தெரிவித்துள்ளார்.

வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விருந்து நிகழ்வின் போது, அங்கு சென்ற பொலிஸார் மதுபானம் வேண்டும் என கோரியுள்ளதாகவும், இதனையடுத்து ஏற்பட்ட முரண்பாடே சம்பவத்துக்குக் காரணம் எனவும் சம்பந்தப்பட்ட வீட்டினர் குறிப்பிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

இதன்பின்னர் குறித்த பகுதிக்கு மேலும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றுள்ளதாகவும் இதனால் முரண்பாடு மேலும் அதிகரித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த மோதலால் அருகிலுள்ள வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்க இந்த விடயம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியபோது, சம்பந்தப்பட்ட வீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் பொலிஸார் அங்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு சென்ற பொலிஸார் மீது வீட்டில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் மோதல் அதிகரித்ததாகவும் இதனையடுத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12.30 அளவில் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகளை எம்பிலிபிடிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

வில்பத்து காடழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டு – ஜனாதிபதி

maiththiriவில்பத்து காடழிப்பு தொடர்பில் சிலர் தற்போதைய அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றத்திற்காக பிற பகுதிகளில் இடங்களை வழங்கக் கூடியதாக இருக்கின்ற போதும், கடந்த ஆட்சிக் காலத்தில் பாரிய காடழிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

2020ம் ஆண்டளவில் புகையிலைச் செய்கை முற்று முழுதாக நாட்டில் தடைசெய்யப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 சவுதியை விட்டு இரான் ராஜீய அதிகாரிகள் வெளியேற 48 மணி நேரம் கால அவகாசம்

saudi_iran_nimrஷியா முஸ்லிம் மதகுரு ஒருவரின் மரண தண்டனையை சவுதி அரசாங்கம் நிறைவேற்றியது தொடர்பில் இரானுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையை அடுத்து, சவுதியை விட்டு இரானிய ராஜீய அதிகாரிகள் வெளியேறுவதற்கு சவுதி அரசாங்கம் நாற்பத்தெட்டு மணிநேரம் அவகாசம் கொடுத்துள்ளது.

பயங்கரவாதம் தொடர்பிலான குற்றங்களுக்காக கடந்த சனிக்கிழமையன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாற்பத்தேழு பேரில் ஷேக் நிம்ர் அல் நிம்ரும் ஒருவர்.

தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தினுள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்ததையடுத்து இரானுடனான உறவுகளை சவுதி முறித்துக்கொண்டுள்ளது.

தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை காரணங்காட்டி, ஏற்கனவே இருந்துவரும் பதற்றங்களை சவுதி அதிகரிக்கச் செய்துள்ளதாக இரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்ஹ லே: ‘இனத்துவ மேலாதிக்க சிந்தனையை தூண்டும் முயற்சி’

sinhale_CI 2இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது ‘சிங்ஹ லே’ (தமிழில்- சிங்கத்தின் இரத்தம்) என்ற சிங்கள வாசகங்களை எழுதியவர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடந்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த விசாரணைகள் நடப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இனங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்படும் விஷமத் தனமான நடவடிக்கை இது என்று அரசியல்வாதிகள் சிலரும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

தென்னிலங்கையில் அண்மைக்காலமாக ‘சிங்ஹ லே’ என்கின்ற வாசகம் சிலரால் பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றது.
நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது ‘சிங்ஹ லே’ எழுதப்பட்டுள்ளது
பெரும்பாலும்இ சிங்ஹ(சிங்கம்) என்ற சொல் கறுப்பு நிறத்திலும் லே (இரத்தம்) என்ற சொல் சிவப்பு நிறத்திலும் அமையும் விதத்தில் இந்த வாசகங்கள் பொறிக்கப்படுகின்றன.

கார்கள்இ ஆட்டோக்கள் மற்றும் தனிப்பட்ட வாகனங்களில் இந்த வாசகம் பொறித்த ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்ளும் வழக்கம் இப்போது அதிகரித்துவருவதாகவும் இது இனவாதம் தலைதூக்குவதன் வெளிப்பாடு எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

‘சிங்கள மக்கள் சிங்கத்திற்கு பிறந்த இனம் என்ற மாயையை மெய்ப்பிப்பதற்காக முயற்சிக்கிறார்கள்’ என்றார் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் அரச கொள்கைகள் தொடர்பான ஆய்வாளருமான கண்டியைச் சேர்ந்த எஸ். பாலகிருஷ்ணன்.

மிருகங்களிலே மிக உயர்வானஇ பலமுள்ள மிருகமாக பார்க்கப்படுகின்ற சிங்கத்தைப் போன்று தாங்களும் இனத்துவ ரீதியாக மேலாதிக்கம் உள்ளவர்கள் என்ற இனவாத சிந்தனையை தூண்டுவதற்கு தான் இந்த வாசகம் பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

இந்த செயற்பாடுகளை தடுப்பதற்குஇ முறைப்பாடு கிடைக்கும் வரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காத்திருப்பது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.