Header image alt text

17.07.2013.
வவுனியாவில் 24ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்-

17634_554144974642315_1842904550_n தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுமாலை 4மணியளவில் ஆரம்பமாகி மாலை 6.30மணிவரையில் நடைபெற்றது. வீரமக்கள் தினமானது கடந்த 13ம்திகதி முதல் நேற்று 16ம் திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. Read more

வவுனியாவில் இன்று நடைபெற்ற புளொட் அமைப்பின் வீர மக்கள் தின இறுதிநாள் நிகழ்வு!!

PhLEPQt4PlEgGzRXH_goObMKu4bEgyLLKG2Ua3rb_HYதமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பால் வருடா வருடம் நினைவு கூறப்படும் வீர மக்கள் தினத்தை முன்னிட்டு 13.07.2013 அன்று வவுனியாவில் ஆரம்பமாகிய 24வது வீரமக்கள் தின நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்றைய தினம் புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் மரணித்த அனைத்து இயக்க தலைவர்கள்இ உறுப்பினர்கள்இ கழகத் தோழர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு வீரமக்கள் தின இறுதி நாள் ஆரம்பமாகியது. Read more

வீரகேசரி நாளிதழுக்கு நேற்று திங்கட்கிழமை வழங்கிய விஷேட செவ்வியிலேயே முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பின்வருமாறு கூறினார்.

vigneshwaran--sambanthan-Flashகாதலித்த பெண்ணை கைவிட்டு பெற்றோர்கள் பார்த்த பெண்ணை மணப்பது போல் ஒரு ஏக்கம் நிறைந்த உணர்வு வட மாகாண சபை முதலமைச்சரர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டவுடன் நான் உணர்கிறேன். எவ்வாறாயினும் எனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பை தமிழர்களுக்காக முழு மூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை முதன்மை வேட்பாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். Read more

வீரமக்கள் தினம் மூன்றாவது நாள் செயற்பாடுகள்

c007இன்றையதினம் புளொட் முன்னாள் உபதலைவர் மாணிக்கதாசன் உட்பட மரணித்த கழக தோழர்கள் மற்றும் அனைத்து இயக்க முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கு புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் நினைவில்லத்தில் நினைவு கூறப்பட்டதுடன் இன்றுமாலை 6.00மனியளவில் வவுனியா இறம்பைக்குளம் இராணி மில் அருகில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளாராகவும் வவுனியா இராணுவ பொறுப்பாளாராகவும் இருந்த ச.சண்முகநாதன் (தோழர் வசந்தன்)அவர்களின் நினைவுத் தூபிக்கு கழக முக்கியஸ்தர்கள்இ ஆதரவாளர்களினால் நினைவுச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.நாளையதினம் வவுனியாவில் புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் நினைவில்லத்தில் மாலை நான்கு மணிக்கு நடைபெறும் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு புளொட் அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.
தகவல் பிரச்சார  ஊடகப்பிரிவு -புளொட்.

 c003 c002

 கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றுகாலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே சி.வி விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்றுகாலை கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையகத்தில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது

வீரமக்கள் தின மூன்றாம் நாள் நிகழ்வுகள்-

c007தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) வருடந்தோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம்திகதி முதல் நாளை 16ம் திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. வீரமக்கள் தினத்தின் 03ம் நாளான இன்றும் வவுனியா கோவில்குளம், புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் சமாதியில் மௌன அஞ்சலியும், மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. வீரமக்கள் தின இறுதிநாளான நாளை செயலதிபர் உமாமகேஸ்வரன் சமாதி வளாகத்தில் மலராஞ்சலி, மௌனஅஞ்சலி நிகழ்வுகளுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
 

.

plote.veeramakkal new (1)

news

Posted by plotenewseditor on 14 July 2013
Posted in செய்திகள் 

வவுனியாவில் இன்றும் ‘வீரமக்கள் தின’ விழா புளொட் அமைப்பால் நினைவு கூறப்பட்டது.. 

2013 Add_1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பால் வருடா வருடம் நினைவு கூறப்படும் வீர மக்கள் தினத்தை முன்னிட்டு நேற்று வவுனியாவில் ஆரம்பமாகிய 24வது வீரமக்கள் தின நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்றைய தினம் புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் மரணித்த தோழர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கழகத்தின் மூவர்ண தோரணங்கள் கட்டப்பட்டது. Read more

News

Posted by plotenewseditor on 14 July 2013
Posted in செய்திகள் 

வெளிநாட்டு கண்காணிப்பு குழுக்களை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசனை-

எதிர்வரும் வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின்போது மூன்று வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்களை ஈடுபடுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகிறது. இது தொடர்பில் நேற்றைய தினம் தேர்தல்கள் செயலகத்தில் கலந்துரையாடப்பட்டதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது சர்வதேச கண்காணிப்பு குழு நியமிக்கப்பட வேண்டும் என்று கோரி இருந்தன. அத்துடன் .தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலின்போது இராணுவத்தினரின் பிரச்சன்னத்தை குறைத்து பொலீசாரை பணியில் ஈடுபடுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அவதானம் மிக்க நாடு – பிரித்தானியா

இலங்கையை பொறுத்தவரை அந்த நாடு பிரித்தானியாவின் அவதானம் மிக்க நாடுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் தாம் பங்கேற்பது சரியான தீர்மானமே என பிரித்தானிய பிரதமர் டேவிட்ட கெமரோன் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம் இலங்கையின் உண்மையான நிலவரங்களை சர்வதேசத்துக்கு அறிவிக்க முடியும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார்.

இரு தமிழ் கட்சிகள் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டி-

வட மாகாண சபைத்தேர்தலில் தமிழ் கட்சிகள் இரண்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சிறி ரெலோ ஆகிய இரண்டு கட்சிகளே இவ்வாறு போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்த அவர் இடதுசாரி கட்சிகள் சிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் தயா மாஸ்டர் மட்டுமே போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரா. சம்பந்தன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது வடமாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்படாத விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கண்ணிவெடியகற்ற 94 சதுர கிலோமீற்றரே மீதம்-

வடக்கில் இன்னும் 94 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தில் மாத்திரமே நிலக்கண்ணிவெடி அகற்ற வேண்டியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. சர்வதேச தரங்களுக்கு அமைய நிலக்கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கை 2002 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். இதன்போது 2064 சதுர கிலோமீற்றர் பகுதி நிலலக்கண்ணிவெடி அபாயம் நிலவும் பிரதேசமாக இனங்காணப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் நிலக்கண்ணிவெடி அபாயம் நிலவும் பிரதேசமாக 505 சதுரகிலோமீற்றர் பிரதேசம் இனங்காணப்பட்டிருந்தது. குறித்த நிலப்பரப்பில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் படிப்படியாக நிறைவு செய்யப்பட்டு தற்போது 94 சதுர கிலோமீற்றர் பிரதேசத்திலேயே நிலக்கண்ணிவெடி அகற்ற வேண்டியுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டயுள்ளார்.

மாகாண சபை தேர்தல்களுக்காக 1500 கோடி செலவு-

எதிர்வரும் வடக்குஇ மத்திய மற்றும் வட மேல் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில்இ தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியஇ பல தரப்பினருடன் நேற்று கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார். இந்த கலந்துரையாடல் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையாளர் செயலகத்தில் இடம்பெற்றது இதன்போதுஇ கட்சியின் பொதுச் செயலாளர்கள்இ தேர்தல் கண்காணிப்பாளர்கள்இ பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோருடன் தேர்தல்கள் ஆணையாளர் கலந்துரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தேர்தலகள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியஇ மாகாண சபை தேர்தல்களின் பொருட்டு 1500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆஸி. சென்ற படகு கவிழ்ந்து குழந்தை பலி:

88பேர் மீட்பு- புகலிடக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார். குறித்த படகிலிருந்து 88 பேர் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த படகில் உள்ளவர்கள் நேற்றே தமக்கு ஆபத்து என உதவி கோரியதாகவும் அதன்படி அவர்களை பாதுகாக்கச் சென்ற அதிகாரிகள் இன்று காலையே அங்கு சென்றதாகவும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைஇ ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்திருக்கலாம் என அவர் சந்தேம் வெளியிட்டுள்ளார். காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணியில் கடற்படை கப்பல்களும் விமானங்களும் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளத்தில் தமிழ் வர்த்தகர் கடத்தல்-

சிவப்பு நிற காரில் வந்த சிலர் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உடப்புஇ ஆனமடு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய சொக்கலிங்கம் சேதுராமன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தல் இடம்பெற்ற போது அதனை நேரில் கண்ட நபர் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். யாரால் எதற்காக இக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என இன்னும் தெரியவரவில்லை. புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்

DSC_0653 (1)இன்றைய தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட் அமைப்பினரால்) வவுனியாவில் உள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனின் நினைவு நூலகத்தில் 24 வது வீர மக்கள் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எப்) உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் வவுனியா நகர பிதாவுமான ஜி.ரி.லிங்கநாதனின் தலைமையில் நடைபெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் உருவப்படத்துக்கு இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா பிரதேச சபைத் தலைவர் திரு.சிவலிங்கம் அவர்களினால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. Read more

News

Posted by plotenewseditor on 12 July 2013
Posted in செய்திகள் 

12..07.2013
 
வீரமக்கள் தின நிகழ்வுகள்-

2013 Add_1தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் நாளை 13ம் திகதிமுதல் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நாளை வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலியுடன் 24ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. மற்றும் வீரமக்கள் தின இறுதிநாளான எதிர்வரும் 16ம்திகதி செயலதிபர் உமாமகேசுவரன் நினைவில்லத்தில் மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. 
 
அலிஸ்டெயார் பேர்ட் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கையின் நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்குப் பொறுப்பான இராஜாங்கச் செயலாளர் அலிஸ்டெயார் பேர்ட் மற்றும் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ் ஆகியோருக்கிடையில் நேற்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டு, பிரித்தானியப் பிரஜையான குரம் ஷெய்க் இலங்கையில் கொலைசெய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பிலும் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

 வடமராட்சி கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்-

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ டிரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றுகாலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  இவ்விபத்தில்  ஜே.லியோ (வயது 21) என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
 
இலங்கைச் சிறார்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன-மேகன் மிச்சேல்-

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிச் சிறுவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் சிறுவர்கள் விவகார  மேகன் மிச்சேல் குற்றம்சுமத்தியுள்ளார்.. த ரேடியோ நியுசிலேண்டுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இலங்கையில் இருந்து அகதியாக சென்ற 11 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.. குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம், சிறைச்சாலையை ஒத்ததாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த சிறுவன் மீதான விசாரணையை துரிதப்படுத்தி, அவரை விடுவிக்க குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தகாயாவிற்கு செல்வதற்கு அனுமதி-

குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் புத்தகாயாவுக்கு இலங்கையர்கள் யாத்திரை மேற்கொள்வது பாதுகாப்பானது என இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் உயர்ஸ்தானிகரம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஏழாம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னர், அங்கு யாத்திரை மேற்கொள்வது, பாதுகாப்பற்றதாக கருதப்பட்டிருந்தது. எனினும் தற்போது அங்கு செல்கின்ற யாத்திரிகர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையர்கள் அச்சமின்றி புத்தகாயாவுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனம் விபத்து-

கொழும்பில் இடம்பெற்ற சமுர்த்தி வேலைத்திட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, பொலனறுவை திரும்பிய சிலர் பயணித்த பஸ் ஒன்று நேற்றுமாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மனம்பிட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவர்கள் பயணித்த பஸ் மரம் ஒன்றில் மோதியதைத் தொடர்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 20பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.. 

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க கோரிக்கை-

வடமாகாண சபைத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச அலுவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இருந்தும் தொழில் நிமித்தமாக வேறு மாவட்டங்களில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் தமது வாக்குரிமையை பெற்றுக் கொள்ள தமக்கு வாக்குப் பதிவு உள்ள மாவட்டங்களில் இருக்கும் தேர்தல்  திணைக்களத்துக்கு விண்ணப்பிக்க முடியும். தற்போது தாம் கடமையாற்றும் திணைக்களங்கள் ஊடாக எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கில் 85 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாது-கபே-

வடமாகாணத்தில் 85 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க முடியாது. தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர்களிடத்தில் இல்லை என  கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் நிலையமும் கபே அமைப்பும் இணைந்து நேற்று நடத்திய தேர்தல் தொடர்பான பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு கூறியுள்ளார். இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. வடமாகாண சபை தேர்தல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரமாட்டார்கள். அவர்கள் வராத பட்சத்தில் அந்த பணியினை கபே அமைப்பு நிறைவேற்றும் என்று கீரத்த்தி தென்னக்கோன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக பிரேம்சங்கர் நியமனம்-

யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக அன்னலிங்கம் பிரேம்சங்கர் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். யாழ். மேல்நீதிமன்ற ஆணையாளராக இதுவரை காலமும் கடமையில் இருந்த ஜே.விஸ்வநாதன் ஓய்வு பெற்றதையடுத்து பிரேம்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ். மாவட்ட நீதிபதியாகவும் பின்னர் திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நான்கு பாடசாலைகள் தரமுயர்வு-

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துஐற அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் ஆஸி. செல்ல இந்தியா உதவ வேண்டும்- மு.கருணாநிதி- 

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அகதிகளாக தவிக்கும் இலங்கைத் தமிழர்கள், சுதந்திரமாக வாழ அவுஸ்திரேலியா செல்ல விரும்பினால் மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.. இலங்கையில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வந்து அகதிகளாக பல ஆண்டுகளாக வாழும் அவர்களின் பரிதாபகரமான வாழ்க்கை நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.  அவுஸ்திரேலியாவுக்குச் சென்று வசதியுடனும், சுதந்திரமாகவும் வாழ முடியுமென்றால், அவர்களின் நல்வாழ்க்கையில் நாம் குறுக்கிடாமல், அவுஸ்திரேலியா செல்வதற்கு மத்திய, மாநில அரசுகள் தம்மால் இயன்ற உதவியைச் செய்ய முன் வரவேண்டும். இதற்கு மாறாக அவுஸ்திரேலியா செல்லமுயலும் அவர்களைக் கைதுசெய்து, சிறையில் அடைப்பதால் பயன் ஒன்றுமில்லை. இப் பிரச்னையை சட்ட ரீதியாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட:டுள்ளார்.