யாழ். கோண்டாவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா-2014-
யாழ். கோண்டாவில் இந்துக்கல்லூரியின பரிசளிப்பு விழா-2014 இன்றுமுற்பகல் 10 மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. தவகீஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சுவாமிஜீ பிரமச்சாரி ஜாக்ரத சைதன்ய (சின்மயா மிஷன்) ஆச்சாரியார் அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. கந்தையா கேதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களும் பெருமளவாக இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இன்றைக்கு பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பெரிய பாடசாலைகளை நோக்கி அனுப்புகின்ற ஒரு மனநிலையிலேயே இருக்கின்றார்கள் இதனால் சிறிய பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் தொகை குறைந்துகொண்டே வருகி;ன்றது. சமுதாயம் இன்று இருக்கின்ற நிலையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளை பெரிய பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக வெகு தொலைவிற்கு அனுப்பிவிட்டு பிள்ளைகள் திரும்பி வரும்வரையில் நீங்கள் பயந்து கொண்டிருக்கும் நிலை உள்ளது ஒரு விடயமாகும். மற்றையது உங்கள் சொந்த ஊர்ப் பாடசாலைகளினுடைய வளர்ச்சியினையும் அது தடுக்கின்றது. ஆகவே இதைவிடுத்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் ஊர்ப் பாடசாலைகளிலேயே கல்வி கற்பிப்பதன்மூலம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி, பாடசாலைகளின் வளர்ச்சி, கிராமத்தின் கல்வி வளர்ச்சி என்பவற்றை உறுதிசெய்து கொள்ள முடியும். இப்போது கிராமிய பாடசாலைகளில் இருக்கின்ற அதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பிள்ளைகளின் கல்வியிலே மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார்கள். ஆகவே நீங்கள் கூடுமானவரையில் உங்கள் பிள்ளைகளை உங்களுடைய கிராமத்துப் பாடசாலைகளுக்கு அனுப்புவதன்மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியையும், இந்தப் பாடசாலைகளின் வளர்ச்சியினையும் உங்கள் கிராமத்தின் கல்வி வளர்ச்சியினையும் உறுதிசெய்யுங்கள் என்று தெரிவித்தார்.





















தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு, இந்திய உயர் நீதிமன்றம் இன்றுபகல் நிபந்தனையுடனான பிணையை வழங்கியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூ
ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை 2014 வாக்காளர் இடாப்பிலிருந்து அகற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாஸ இதனை ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்கொடி வழக்கு மற்றும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் 3 வருட சிறைத்தண்டனையும், அதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் அவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இத் தீர்ப்புகளின் காரணமாக சுமார் 3 வருடங்கள் சரத் பொன்சேகா சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார். எனினும் அவரது சிறைத்தண்டனை முடிவடைவதற்கு இரு மாதங்கள் இருக்கையில் அரசியலமைப்பின் 34வது பிரிவின்மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி, பொதுமன்னிப்பின்கீழ் சரத் பொன்சேகாவை விடுதலை செய்திருந்தார்.
கடந்த 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கமைய வலி மேற்கு பிரதேசத்திகு விஜயம் மேற்கொண்ட இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க பிரதிநிதிகள் 10 கல்வி பயிலும் மாணவர்கட்கு மிக பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்விக்கு ஒத்துழைப்பை வழங்கினர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், இவ்வாறான துடிப்புமிக்க இளைஞர்களின் பணி முக்கியமான ஒன்றாகவே இன்று காணப்படுகின்றது. இளவாலையை சேர்ந்த இவ் இளைஞர்கள் தமது பிரதெசத்திற்கப்பாலும் சேவையாற்ற வேண்டும் என்ற மனப்பாங்கில் எமது பிரதேசத்திற்காற்றிய இவ்; உதவி தொடர்பில் பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன். நடைபெற்று முடிந்த கோர யுத்தத்தின்பின் நாம் எதிர்நோக்கும் சவால்கள் ஏராளமானவை. வெறுமனே வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொட்பில் வாழ்வாதரத்தினை கட்டி வளர்க்க முடியத நிலையில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உதவும் என கூறியதோடு இவ்வாறான இளைஞர் சமூகத்தினை பாராhட்டுவதாகவும் உதவி புரிந்தவர்களை பாராட்டுவதாகவும் கூறினார்.
