Header image alt text

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2015இல்

imagesஜனாதிபதி  தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது குறித்த சந்தேகத்திற்கு விடைகிடைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரி அரச அச்சகத்திற்கு ஜனாதிபதி கையொப்பமிட்ட ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது இரண்டாம் தவணைக்கான பதவிக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையிலேயே தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்இ சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார்.
எதிர்வரம் ஜனவரி மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதி தேர்தல் நடாத்;துவதற்கான திகதியை நிர்ணயிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Wasanthaஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக வெளியாகியருந்தன. அதனை உறுதிசெய்யுமுகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முக்கியஸ்தராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க  நேற்று (20.11.14) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். இவற்றின் தொடர்ச்சியாக  28 ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகி வெளியில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
 
பொது எதிரணி வேட்பாளர்: இழுபறி நிலை

opposition_leadersஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தவணைக்கும் போட்டியிடவுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் எதிரணிக் கூட்டமைப்பின் முயற்சிகள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன. மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடக்கூடிய பொது வேட்பாளராக களமிறக்கப்படக்கூடியவர்கள் என்று பல தலைவர்களின் பெயர்கள் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித்த தேரர் உள்ளிட்டோரின் பெயர்கள் இதுதொடர்பில் பல தரப்பினராலும் பிரேரிக்கப்பட்டுள்ளன.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, எதிரணியின் பக்கம் சாய்ந்து பொது வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. பிந்தி கிடைத்த செய்திகளின் படி மைத்திரிபால சிசேன பொதுவேட்பாளராக களம் இறங்கவிருப்பதாக தெரிகிறது. இவர் போட்டியிட்டால் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் வாங்குகள் பிளவுபடும் வாய்ப்யும் மகிந்த ராஜபக்ச தோல்வியடைய வாய்ப்பும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏதிரணி வேட்பாளர் நிச்சயமான பின்பே அடுத்தகட்ட நிலை பற்றி அறியமுடியும். இருப்பினும் நாட்டில் குடும்ப ஆட்சிக்கு பலத்த எதிர்ப்பு உண்டு அதே நேரம் சிறீலங்கா சுதந்திரக்கட்சியை காப்பாற்றும் முயற்சியில் சந்திரிக்காவும் அக்கட்சியின் முக்கியத்தர்களும் முயற்சிக்கின்றார்கள் என்பதும் தெரிகின்றது.

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை – ருவன் வணிகசூரிய

ruwan(1)இலங்கையில் பயங்கரவாதம் மீண்டு நிலவுவதற்கான நிலைமை உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இலங்கையில் மட்டுமன்றி 13 நாடுகளில் இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக அந்த செய்திகளில் கூறப்படுகின்றபோதும் இலங்கையில் அவ்வாறான ஒரு நிலைமை இல்லை. கடந்த 3 தசாப்த காலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நாட்டிலிருந்து ஆயுத ரீதியலான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் வாழும்  சிலரால் பிரிவினைவாதம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் இன்னுமொரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுகளிலுள்ள சிலர் குழுக்கள் செயற்படுகின்றனர். எனினும் மீண்டும் இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கோ, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளுக்கோ இராணுவம் ஒருபோதும் இடம்தராது என்றார் இராணுவபேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய

6 மாகாணங்களில் அதிக மழை வானிலை அறிக்கை

1a(6)அவதான திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு, வடமத்தி, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும்;. தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடரும் என எதிர்பார்ப்பதாக் தெரிவித்துள்ளது நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக காலி வரை வரையான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.அதன்போது இந்த கடற்பகுதிகளில் அலையின் வேகம் அதிகரிக்ககூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பெரும்பாலான கடற்பிராந்தியங்களில் மழை அல்லது மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கொழும்பு தேசிய அரும்பொருட்காட்சியகத்துக்கு அருகில் மரமொன்று முறிந்து விழுந்ததை தொடர்ந்து, அந்த அரும்பொருட்காட்சியகம் மற்றும் தாமரைத்தடாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலையகத்திலும் காலநிலை அயாயம் தொடர்கின்றது.

வடமாகாண சபையில் 5 பிரேரணைகள் நிறைவேற்றம்

northern_provincial_council1வடமாகாண சபையின் 19 ஆவது மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத்தொகுதியில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா உள்ளிட்ட 5 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட 7  பிரேரணைகள் சபையில் முன்வைக்கப்பட்டன. இதில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் கொண்டு வந்த ‘நீர் உயிரின வளர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான காணிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் மாந்தை உப்பு கூட்டுத்தாபன காணியை வழங்குமாறு மத்திய கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கோரும் பிரேரணை அடுத்த அமர்விற்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார். அதனை தவிர, ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரனின் 2 பிரேரணைகளும் ஒரே மாதிரியான பிரேரணைகளாக இருந்தமையால் அது ஒரு பிரேணையாக மாற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்றைய அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 5 பிரேரணைகளும் பின்வருமாறு,

1. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் – விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரை கோருதல்.

2. வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் – முல்லதை;தீவு மாவட்டத்தில் அழிந்துபோயுள்ள 115 குளங்களை புனரமைத்து விவசாய, கமநல, கால்நடை வளர்ப்பிற்கு உதவ முன்வருதல்.

3. ஆளுங்கட்சி உறுப்பினர் வே.சிவயோகன் – வடமாகாணங்களிலுள்ள திணைக்களங்கள் அலுவலகங்களில் 2009 ஆம் ஆண்டு முதலான கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஊழல்களை கண்டுபிடித்து அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல்.

4.சிவயோகனின் இரண்டாவது பிரேரணையாக மாகாண ஒவ்வொரு அமைச்சுக்களிலும் கணக்காய்வு பிரிவுகளை தனித்தனியாக உருவாக்குதல்.

5.எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா – யாழ்.நல்லூர் சட்டநாதர் கோவிலில் அமைந்துள்ள மந்திரிமனை அமைந்துள்ள (9 பரப்பு) காணியை தனியார் வர்த்தக நோக்கத்திற்கான பாவனையிலிருந்து தடுப்பதற்கான நடவடிக்கையை வடக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்.

மரண தண்டனைக் கைதிகளான இந்திய மீனவர்கள் விடுதலை

fishermendeathதமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் 2011ம் ஆண்டில் இலங்கைக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , கொழும்பு உயர்நீதிமன்றத்தால், மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த ஐந்து மீனவர்கள் தாக்கல் செய்த மேன் முறையீடு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
 மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் சிறையிலிருந்து விடுவித்துவிட்டதாகவும், அவர்களை இலங்கை குடிவரவு அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் இலங்கை சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில், இந்த மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும், இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்ஹா விடுதலையான மீனவர்கள் தூதரகத்தில் சந்தித்தார் என்றும். விரைவில் அவர்களை இந்தியா அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் கூறியிருக்கிறது.
இலங்கை ஜனாதிபதி ‘மனிதநேய சமிக்ஞையாக’ இவர்களை விடுதலை செய்திருப்பது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஏற்கனவே நிலவும் உறுதியான மற்றும் பன்முகத்தன்மையுடைய இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று தூதரக செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்களின் வழக்கறிஞர் அனில் சில்வா, இலங்கை அரசியல் சட்டத்துக்கு அமைய, ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் பேரிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 இதன்படி இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனை முற்றாக நீக்கப்பட்டுள்ளதா? இல்லாவிட்டால் அந்த தண்டனை குறைக்கப்பட்டுள்ளதா? இது சம்பந்தமான விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.

எங்கள் உறவுகளை விடுதலை செய்யாதது ஏன்?
இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மண்டை தீவைச் சேர்ந்த கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜின் மற்றும் குருநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன், கமல் கிறிஸ்டி ஆகிய இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரியிருக்கின்றனர்.
இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை மீனவர்கள் பற்றி தகவல் தெரிவிக்காதிருப்பது தங்களுக்குக் கவலையளிக்கின்றது என்றும். இந்திய மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யும்போது ஆனால் எங்கள் உறவுகளை விடுதலை செய்யாதது ஏன்? அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் நாங்களும் தூக்கில் தொங்குவதைவிட வேறு வழி எங்களுக்கு இல்லை 
அவர்களை நம்பித்தான் நாங்கள் வாழ்கின்றோம். அவர்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது’

வடமாகாண சபை 31சதவீத நிதியையே செலவு செய்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் 

veera01வடமாகாண ஆளுநர் அலுவலகமும், மூத்த பிரஜைகள் கழகமும் இணைந்து ஜனாதிபதியின் பிறந்தநாளில் முதியவர்களுக்கு உதவி பொருட்களை வழங்கும் நிகழ்வை நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தினர்.  இந்நிகழ்வில் கலந்துகொண்டு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில் அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 31 சதவீதமான நிதியையே வடமாகாண சபை இதுவரையில் செலவு செய்துள்ளது. ‘வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண சபை உருவாகுவதற்கு முன்னர் வடமாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்துவிட்டு மேலதிக நிதியை அரசாங்கத்திடம் கோருவார்.  வடமாகாண சபை உருவாகிய பின்னர் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. ஏனெனில், Read more

ஜனாதிபதிக்கு நல்லாசி சிறப்புப் பூசை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்

mk06ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது 69 பிறந்தநாளையொட்டி பிறந்த தினமான நேற்று அவருக்கு நல்லாசி வேண்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்றன. துரைச்சாமி குருக்கள் தலைமையில் விசேடமாக இந்துகுருமார்கள் வேதம் ஒதி ஜனாதிபதி அவர்களுக்கு நல்லாசி வேண்டி சிறப்புப் பூசைகளை முன்னெடுத்தனர். அத்துடன் துரைச்சாமிக் -குருக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து காளாஞ்சிகளையும் வழங்கி வைத்தார். இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஆகியோருடன் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகனன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஜனாதிபதியின் இந்துசமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் இராமச்சந்திரக்குருக்கள் பாபுசர்மாவும் உடனிருந்தார்.

mk02 mk06 mk09 mk10

நுவரெலியா   மாவட்டத்தில் 2,073 பேருக்கு 15 தற்காலிக முகாம்கள்

malyakamநுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 678 குடும்பங்களைச் சேர்ந்த 2073 பேர், இதுவரையிலும் தற்காலிக முகாம்களிலே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிறி தெரிவித்தார். நுவரெலியாவில் 218 குடும்பங்களை சேர்ந்த 341 பேர் – ஐந்து முகாம்களிலும், கொத்மலை பிரதேசத்தில் 190 குடும்பங்களை சேர்ந்த 741 பேர் – மூன்று முகாம்களிலும், வலப்பனை பிரதேசத்தில் 84 குடும்பங்களை சேர்ந்த 278 பேர் – இரண்டு முகாம்களிலும் ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் 39 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் – ஒரு  முகாமிலும், அம்பகமுவ பிரதேசத்தில் 147 குடும்பங்களை சேர்ந்த 587 பேர் -நான்கு முகாம்களிலும் இன்னும் சிலர்  தங்களது உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். மொத்தமாக 15 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2,073 பேருக்கான நாளாந்த உணவு, கிராமசேவகர்கள் ஊடாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தொடர்ந்தும் நுவரெலியா மாவட்டத்தின் காலநிலை சீரற்ற நிலையில் காணப்படுவதால், இவர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்பிவைப்பதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும், காலநிலை முற்றாக சீரடைந்த பின்னரே இவர்களை சொந்த வீடுகளில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குமாரசிரி குறிப்பிட்டார்.

பண்டைய கால பிரபுத்துவ முறை வேதனையளிக்கிறது – வாசுதேவ நாணயக்கார

malayakam1பெருந்தோட்டத்தில் பண்டைய கால பிரபுத்துவ முறை இன்னும் வழகிலுள்ளமை மனவேதனை அளிக்கின்றது என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் விநியோக சேவை தனித்தனியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்தார். கெயார் சர்வதேசம், இலங்கை மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவகம் இணைந்து ஒழுங்கு செய்திருந்த, ‘இலங்கை பெருந்தோட்ட சமூகத்தினரின் சேவை வழங்குதலை இலகுவாக்கல்’ தொடர்பான விளைவுகள் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களை பகிரும் நிகழ்வு கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்து பகிர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், Read more

 அமைச்சு பதவிகளிலிருந்து சம்பிக்க, கம்மன்பில இராஜினாமா – ஜாதிக ஹெல உறுமய


untitledஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும்  தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதி பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சர் உதயன் கம்மன்பிலவும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கல், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதி செய்தல், ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்ககை எடுத்தல் உள்ளிட்ட 35 அம்சங்கள் அடங்கிய  கோரிக்கையை அரசாங்கத்திடம் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த போதிலும் அவற்றை நிறைவேற்றும் முடிவில் அரசாங்கம் இல்லை என தெளிவாகிறது. Read more

தேர்தல் நெருங்குவதால் மகிந்த பொய் சொல்லுகிறார்’: சொல்ஹெய்ம் (BBC)

erik_solheim_mahinda_rajapaksheஇலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். நோர்வேயின் முன்னாளர் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் மீதான இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நோர்வே அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நோர்வேயின் பங்களிப்புடன் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் 2006-ம் ஆண்டு ஏப்ரலுடன் முறிவடைந்தது. அதன்பின்னர் மூன்று ஆண்டுகளில் இலங்கை அரச படைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த நிலையில் 2009-ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது. போர் வெற்றிக் கொண்டாட்டங்களின் உச்சத்தில், 2010-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் தவணைக்காக வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ஷ, இப்போது மூன்றாவது தவணைக்காகவும் போட்டியிடவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்துவருகின்றன. வடக்கு பிராந்தியத்திற்கான அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பணியில், வட மேல் மாகாணத்தில் குருநாகல் நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோதே மகிந்த ராஜபக்ஷ, எரிக் சொல்ஹெய்ம் மீதான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார். Read more

மன்னாரில் முன்னாள் புலி உறுப்பினர் கொலை தொடர்பில் 6-பேர் கைது

Mannar-Dath-01இலங்கையில் மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலைச் சம்பவம் தொடர்பில் அரச ஊழியரான கிராமசேவகர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகம். அத்துடன், தடயவியல் ரீதியான முக்கிய சாட்சியங்களும் விபரங்களும் விசாரணைகளில் கிடைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் சாட்சிகள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும். ‘பல விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன. சாட்சியங்களின் ஊடாக கொலைக்கான காரணம் பற்றிய தகவல்களை விசாரணைகள் முடிவடைந்ததும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும். அந்தப் பகுதியின் பிரதேச செயலாளர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும். இந்தச் சம்பவத்தில் எவர் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களின் பதவி நிலையையும் பாராமல் நாங்கள் கைது செய்வோம் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண பிபிசியிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜந்து மீனவர்கள் விடுதலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

meenavarkalin marana thandanaiyaiஇலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக 5 இந்திய மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட  தீர்ப்புக்கு எதிராக பரவலாக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக இராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டன.
இந்த விவகாரத்தில், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு, அப்பீல் வழக்கின் செலவுக்காக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடந்த 8–ந் தேதி ரூ.20 லட்சம் அனுப்பி வைத்தது Read more

தேர்தல் அறிவிப்பின் பின்னரே பொது வேட்பாளர் அறிவிப்பு-ரணில்-

imagesஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள பொது வேட்பாளர் குறித்து, இந்த தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதன் பின்னரே அறிவிக்கப்படும் என ஐ.தே.கட்சி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் ஒன்று அடுத்த வருடம் நடைபெறும் என்று ஜனாதிபதியே கூறி வருகிறார். இது இன்னமும் உறுதியாக தெரியாகவில்லை. தற்போது இந்த தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகி வருகின்றபோது, தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின்னர் எங்களின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும். தேர்தலுக்கான எதிர்க்கட்சியின் வளங்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே தேர்தல் அறிவிப்பின் பின்னரே எங்களின் பொது வேட்பாளர் குறித்தும் அறிவிக்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

கோரிக்கைகள் தொடர்பில் ஒளிவு மறைவின்றி பேச வேண்டும்-கூட்டமைப்பு-

thamil thesiya koottamaippu indiaதங்களின் கோரிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர், ஒளிவு மறைவின்றி திறந்த மனதான பதில்களை வழங்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து, தாங்கள் முன்வைக்கின்ற மூன்று கோரிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்திருந்தார். இந்த கோரிக்கைகளை தங்களிடம் நேரடியாக முன்வைத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் தெரிவித்திருந்தன. இந்நிலையில் குறித்த கட்சிகளிடம், தங்களின் கோரிக்கைகள் நேரடியாக முன்வைக்கப்படுமா? என ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் அவர்கள், இந்த விடயங்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஊடகங்கள் வாயிலாக தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளாங்குளம் துப்பாக்கிச்சூடு தொடர்பில் நால்வர் கைது-

mannaril kudumpastham kaithuமன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் நால்வர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கிருஷ்ணசாமி புகுனேஷ்வரன் என்பவரரே கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து இலுப்பைகடவை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளினூடாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரழந்தவர் புணர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செல்போன் மூலம் அபராதம் செலுத்தும் முறை அறிமுகம்-

மோட்டார் வாகனங்கள் தொடர்பான தவறுகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களை செலுத்த, கையடக்கத் தொலைபேசி மற்றும் கிரடிட் காட்களை பயன்படுத்தும் முறையொன்றை அறிமுகப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதன் முதற்கட்டமாக கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அபராதம் செலுத்தும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார். இவ்வருட இறுதியில் இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எந்த ஒரு கையடக்கத் தொலைபேசி இலக்கத்தில் இருந்தும் இவ்வாறு அபராதத் தொகையை செலுத்துவற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. மோட்டார் வாகனங்கள் தொடர்பான தவறுகளுக்காக அபராதம் செலுத்துவது தொடர்பில் எதிர்நோக்கிவரும் சிரமங்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சாட்சிய பதிவை நிறுத்திய ஐ.நா-

இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நடாத்தும் விசாரணைக்கான சாட்சியங்கள் பெற்றுக் கொள்வது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. ஐ.நா மனித ஆணைக்குழு அலுவலகத்தின் விசாரணைக்குழுவிற்கு போர்க்குற்றம் குறித்து சாட்சியங்களை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை கடந்த 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் சாட்சியப் பதிவுகள் இடம்பெற்றன. எனவே தற்போது முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் கால எல்லை அதிகரிப்புக்கு இலங்கை அரசு ஆட்சேபம் வெளியிட்டு வருகின்றது.

கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் சாவு-

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் யாழ். புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் தனுஷன் (வயது- 09) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், நீர் அருந்துவதற்காக கிணற்றடிக்குச் சென்றபோது தவறி வீழ்ந்துள்ளான் என்றும், சிறுவனை நீண்டநேரமாகக் காணாத உறவினர்கள், தேடியபோது சிறுவன் நீரில் மூழ்கியமை தெரியவந்தது என்றும், இது குறித்து தமக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சேகுவேரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு-

seguveraஉலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கியூப இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு கியூப இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் இரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது. அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பொலிவியாவில் மத போதகர் லூயிஸ் கார்டேரா என்பவரிடம் இருந்தன. 2012ஆம் ஆண்டில் அந்த மத போதகர் இறந்தபோது, அவரது உடைமைகளை உறவினர்கள் சோதனையிட்டதில், சேகுவாராவின் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகைப்படங்களை, அவரது உறவினரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான இமானுல் ஆர்டியா என்பவர் தனது நாட்டுக்கு எடுத்து வந்தார். Read more