Header image alt text

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருவதற்காக ஓரணியில் ஒன்றிணைவோம் – ஆனந்தசங்கரி

sangariதிரு வீ. ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் எதிர்வரும் புதன் கிழமை (18.;03.2015) காலை 10.00 மணியளவில் எமது கொழும்பு அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல்

சகல தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைத்து நம் கோரிக்கைகளை முன் வைப்பதன்  மூலமே எமது மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதோடு நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் எமது இனப் பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வினையும் பெற்றுக் கொள்ள முடியும். Read more

19ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி: வர்த்தமானியும் வெளியானது

parlimentஇலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்புக்கு திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதுடன் விசேட வர்த்தமானியும் வெளியானது.
இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று அவசரமாகக் கூடியிருந்த விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.
புதிய திருத்தங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி, நேற்றிரவே வெளியிடப்பட்டதாக அரசாங்க அச்சகக்கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் நேற்றை அமைச்சரவைக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 
1. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக மாறும்,  
2. இலங்கையில் அனைத்து தேர்தலிலும் விகிதாசார முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற முறை கடைப்பிடிக்கப்படும்.  
3. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை மீண்டும் கொண்டுவரப்படுகிறது. 
4. ஜனாதிபதியின் ஓர் ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும்.
5. நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது. ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும்.
6. ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்போது அவர் உத்தியோகபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்துவருகின்ற சட்டத் தடை அகற்றப்படும்.
7. இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரே அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், அதிகபட்சமாக 40 பேரே துணை அமைச்சர்களாகவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.
8. 17ஆம் அரசியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படும்.
9. நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் அமையும். ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார்.
10. பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதிக்கு இருக்கும்

அத்துமீறுவோரை சுடும் அதிகாரம் கடற்படைக்கு உண்டு

ranil01இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த கடற்படையினருக்கு அதிகாரம் உள்ளது என இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைக்காட்சிக்கு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள செவ்வியால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கெனவே இந்திய ஊடகமொன்றுக்கு பேட்டியளித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும் என்ற கருத்தை வெளியிட்டிருந்ததால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதிலுமிருந்து பாரிய எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்து சென்றார். இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் மேற்கண்டவாறான கருத்தை பிரதமர் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளமையால், மீண்டும் அவருக்கு எதிரான எதிர்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.
அந்த செவ்வியில்  மேலும் தெரிவித்த விக்கிரமசிங்க, ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் இலங்கை மக்களை மோடி வெற்றிகொண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரம் இலங்கை கடற்படையினருக்கு உள்ளதாகவும் அதுவொன்றும் புதியதல்ல என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு வலியுறுத்தியதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.

இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் என்னிடம் உள்ளன: சுரேஷ்

sureshஇரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்த தான் தயார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,

கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய முகாம்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படாமல் அவ்வாறான முகாம் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதியின் ஊழல்கள் தொடர்பாகவும் அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாகவும் விசாரிக்க குழு அமைத்துள்ளார்கள்.

ஆனால், இரகசிய முகாம்கள் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் நடத்தாது இராணுவ தளபதியும் கடற்படை தளபதியும் அவ்வாறான முகாம் இல்லை என கூறினர், எனவே, அவ்வாறான இரகசிய முகாம்கள் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

திருகோணமலையில் கோட்டாபய எனும் பெயர் கொண்ட இரகசிய தடுப்பு முகாம் இருந்தது. அதில் 700 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அவ்வாறான முகாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முன்னர் இருந்தது. இதற்கான சாட்சியங்கள் என்னிடம் உண்டு. முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் சாட்சியங்களை முற்படுத்துவேன்.

அந்த முகாம் தொடர்பிலும் அந்த முகாமில் இருந்தவர்கள் யார்? அவர்கள் இப்பொழுது எங்கே? எதற்காக தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு விடையையே நாங்கள் கோருகிறோம்.

இறுதி யுத்தத்தின் போது பேருந்துகளில் 20 ஆயிரம் பேர்  ஏற்றி செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்கள். அவர்களை ஏற்றி சென்றதை அவர்களுடைய உறவினர்கள் நேரில் கண்டுள்ளார்கள்.

எனவே, இந்த விடயங்களை முன்னைய அரசாங்கம் போல் மூடி மறைக்க முயலாமல் அது தொடர்பான பூரண விசாரணையை புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

அதனை விடுத்து கடற்படையிடம் கேட்டோம், இராணுவத்தினரிடம் கேட்டோம் அவர்கள் அவ்வாறான முகாம்கள் இல்லை என்கிறார்கள். எனவே ,அவ்வாறான முகாம் இல்லை என்ற பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைக்கு தலைவர், பிரதி தவிசாளர் தெரிவு

east makanamதிங்கட்கிழமை (16) நடைபெற்ற விசேட அமர்வில் கிழக்கு மாகாண சபையின்  தலைவராக சந்திரதாச கலபதியும் பிரதி தவிசாளராக இரா.துரைரத்தினமும் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர், பிரதி தவிசாளர் தெரிவை அடுத்து, ஐந்து நிமிடங்கள் வரை சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய சபை தலைவர் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், புதிய சபை தலைவரினால் மீண்டும் கூட்டப்பட்டது. இதன்போது, இம்மாதம் 31ஆம் திகதி மீண்டும் சபை கூடவுள்ளதாக புதிய சபை தலைவரினால் அறிவிக்கப்பட்டது .
கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையிலான அமைச்சரவையின் முதலாவது அமர்வு இதுவாகும். இதில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் கலந்துகொண்டார். ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒஸ்ரின் பெர்ணான்டோ கலந்து கொள்ளும் முதலாவது அமர்வும் இதுவாகும்.
முன்னர் தவிசாளராக  செயற்பட்ட ஆரியவதி கலபதி தற்போது வீதி, போக்குவரத்து மற்றும் காணி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சங்கானை மேற்கு பிரதேச நூலக திறப்பு விழா

Vali west01வலி மேற்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட சங்கானைப் பிரதேச நூலகம் கடந்த 09.02.2015 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இவ்  நிகழ்வு வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி. ஐங்கரன் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தழிழரசுக் கட்சியின் தலைவருமாகிய கௌரவ.மாவை.சோ.சேனாதிராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.அப்பாத்துரை.விநாயகமூர்த்தி, கௌரவ.ஈஸ்வரபாதம்.சரவணபவன்,கௌரவ.சுரேஸ்.பிரேமச்சந்தின கௌரவ.சிவஞானம்.சிறீதரன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கௌரவ.தர்மலிங்கம்.சித்தாhத்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபை உறுப்பினரர்களான கௌரவ.விந்தன்.கணகரட்ணம், கௌரவ.இமானுவேல்.ஆணோட் பேராசிரியர். சி.க.சிற்றம்பலம் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். Read more

வலி மேற்கில் மக்கள் மயப்படுத்தப்பட்டதான 100 நாள் விசேட அபிவிருத்தித்திட்டம்

valiwest01 valiwest02 valiwest03 valiwest04வலி மேற்கில் மக்கள் மயப்படுத்தப்பட்டதான 100 நாள் விசேட அபிவிருத்தித் திட்டத்திற்கு இணைந்ததாக கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்சித்திட்டம் இன்று ஆரம்பம் வலி மேற்கில் மக்கள் மயப்படுத்தப்பட்டதான 100 நாள் விசேட அபிவிருத்தி திட்டத்திற்கு இணைந்ததாக கிராமங்களை அபிவிருத்திசெய்யும் நிகழ்சித்திட்டம் இன்றய தினம் இன்று(16.03.2015) ஆரம்பம் குறித்த செயல் திட்டத்தின் போது இன்றய தினம் ஆறு கிராம சேவகர் பிரிவு ரீதியான மக்கள் திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது. இவ் திடடத்தின் போது மக்கள் சந்திப்பு இடம் பெற்று அதன் வாயிலாக அபிவிருத்தித்த் திட்டங்கள் இனங்காணப்பட்து.. இவ் நிகழ்வின் போது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ. திருமதி.நாகரஞ்சினி. ஐங்கரன், பிரதேச செயலர் திரு.ஆ.சோதிநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.சிவகுமார், அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி.பொன்மலர் தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் த.புலேந்திரன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கிராமசேவகர்கள் மற்றும ஏராளமான பொது மக்கள் கலந்து சிறப்பித்து தங்களது திட்டங்களை முன்வைத்தனர்

மாற்றம் காணும் சங்கானை மீன் சந்தை

chankanai chankanai1 chankanai2 chankanai3சங்கானைப் பகுதியில் மிக சனத்ததொகை நெருக்கடியான பகுதியாக அமைவது சங்கானை பிரதேச செயலகத்தினை சூழ உள்ள பகுதியாகும். 25 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள இவ் செயலகம ஆனது சுமார் 200 அரச பணியாளர்களை கொண்டு தனது சேவையை வழங்கி வருகின்றது. இவ் நிலையில் அலுவலக வேனைகளில் இப் பகுதி மிகுந்த நெருக்கடியான பகுதியாகவே அமைவு பெற்றிருப்பது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதே வேளை குறித்த பிரதேச செயலகத்தின் முன பகுதியில் மேற்படி தற்போதய மீன் சந்தை அமைந்திருப்பது மிக நெருக்கடியினை ஏற்படுத்தும் அதே வேளை சுகாதார சீர் கேடுகளையும் கொண்டதாக அமைந்திருந்தது. இதே வேளை இவ் சங்கானைப் பகுதியானது பொதுமக்களுக்கான சேவை மையமாக அண்மைக்காலத்தில் மிக வேகமான வளர்ச்சியினை கொண்டுள்ளது. தற்போது உள்ள இட நெருக்கடியினை கருத்தில் கொண்டு புதிய மீன் சந்தை சங்கானை பிரதேச செயலகத்தின் பின் பகுதியில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றது. இவ் சந்தையானது 36 மில்லியன் ரூபா செலவில் வலி மேற்கு பிரதேச சபையால் அமைக்கப்படுவது குறிப்பிடக் கூடிய ஒர் விடயம் ஆகும்

 

IMG_7699 IMG_7715 IMG_7753 IMG_7826வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா இன்று (14.03.2015) சனிக்கிழமை காலை 9மணியளவில் முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. குணராஜா சிவகுமாரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும்இ வவுனியா  நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும்இ தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள்இ பெற்றோர்கள்இ மாணவர்கள்இ கிராம முக்கியஸ்தர்கள்இ நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர். மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப்  போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சிஇ முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள்இ வினோத உடை நிகழ்ச்சிஇ பழைய மாணவர் நிகழ்ச்சிஇ பெற்றோர் நிகழ்ச்சிஇ விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

 

மலையகத் தலைவர்களை டில்லி வருமாறு – மோடி அழைப்பு

malaiyagamஇலங்கைகான இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடி கொழும்பு மற்றும் வடபகுதிக்கு மட்டுமே சென்றிருந்தார். நாட்டின் கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு அவர் வராதது வருத்தமும், ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளன என்று அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் இந்தியா புறப்படும் முன்னர் மலையகப் பகுதித் தலைவர்களை நரேந்திர மோடி சந்தித்தார். மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அப்பகுதி தலைவர்களை டில்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது மலையகப் பகுதி தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகள் தன்னிடம் போதியமான அளவில் இல்லை என்றும், அவற்றை சேகரிக்கும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தங்களிடம் தெரிவித்தார் என அவரைச் சந்தித்த குழுவில் இருந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கையில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் இந்தியப் பிரதமர் சூசகமாக தங்களிடம் தெரிவித்ததாகக் கூறும் அவர், மலையகப் பகுதியில் 20,000 வீடுகளைக் கட்டித்தர இந்தியப் பிரதமர் உறுதியளித்ததாகவும்.
போதுமான நேரமின்மை மற்றும் பயண ஒழுங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் காரணமாகவே தன்னால் மலையகப் பகுதிக்கு வரமுடியவில்லை என்றும் ஆனாலும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களின் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதையும் அவர் தங்களிடம் கூறியதாகவும் அவர் மேலும் கூறினார்.

லாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்

lahore bombபாகிஸ்தானின் லாகூர் நகரில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தபோதே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என்று கருதப்படும் இத்தாக்குதல்கள், லாகூர் நகரில் கிறிஸ்தவ மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதியான யௌஹனாபாதில் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானிய தாலிபான்களின் ஒரு கிளை அமைப்பான ஜமாத்துல் அஹ்ரர் எனும் அமைப்தே இத்தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மிகப் பெரும்பான்மையாக முஸ்லிம்களே வாழ்ந்துவரும் சூழலில் அங்குள்ள கிறிஸ்தவர்கள் நாட்டின் மக்கட்தொகையில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவான அளவே உள்ளனர்.

கன்னியாஸ்திரி மீது பாலியல் வல்லுறவு: பொலிசார் கைது நடவடிக்கைகள்

நொதியா மாவட்டத்தில் அமைந்துள்ள ரானாகட் என்ற கிறிஸ்தவ மடமொன்றினால் நடத்தப்படும் இயேசு மேரி பள்ளிக்கூடத்தில் முதல்வரின் அறையில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுங்கி இருந்தவர்கள் பின்னர், அதே வளாகத்தில் இருந்த கிறிஸ்தவ மடத்துக்குள் நுழைந்திருந்தனர்.
அங்கு மூன்று கன்னியாஸ்திரிகளே இருந்ததாகவும், அதில் இரண்டு பேரையும், காவலரையும் கட்டிப்போட்டுவிட்டு எழுபது வயதுக்கும் அதிகம் கொண்ட கன்னியாஸ்திரியை ஒருவரை அவர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தனர்.
இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து எட்டு ஒன்பது லட்ச ரூபாய் பணத்தையும் அவர்கள் திருடிக்கொண்டு சென்றிருப்பதாகவும், அங்கிருந்த தேவாலயத்தில் பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு, திருப்பலி பூசைகளின்போது பயன்ப்படுத்தப்படுகின்ற பாத்திரத்தையும் கொண்டுசென்றுவிட்டதாக  பள்ளிக்கூடத்தில் இத்தாக்குதலை நடத்திய ஆறு பேரின் முகங்களும் கண்காணிப்பு கேமரா படங்களில் பதிவாகியிருப்பதாகவும். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் இதுவரை எட்டு பேரைக் கைதுசெய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்ற ஒரு நேரத்தில், இந்த சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், கூடுதலான பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறி கிறிஸ்தவக் குழுக்கள் பல இந்த சம்பவத்தை கண்டித்தும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன.

இந்தியப் பிரதமருடன் உரையாடியது தொடர்பாக ஊடகங்களுக்கு – மனோ கணேசன்

malaiyagam1 ‘தமிழர் ஒற்றுமை’ என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய  முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே  ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக வாழ முடியும். அதற்கு இந்தியா துணை இருக்கும் என்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக நான் இப்போதுதான் அறிந்து வருகிறேன். மலையகத்தில் வாழும் பின்தங்கிய இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை நாம் இப்போது திரட்டி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Read more

தனி ஈழம் சாத்தியமற்றது!- தர்மலிங்கம் சித்தார்த்தன்-

Sithar ploteதர்மலிங்கம் சித்தார்த்தன். ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் ‘புளொட்’ இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்றார்.

இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் அவர் சென்னை வந்திருந்தார். அவரை குமுதம் சஞ்சிகையினர் நேரில் சந்தித்து ஈழத்தின் இன்றைய நிலை குறித்து கேட்டபோது அவர் வழங்கிய கருத்துக்கள்!. Read more

இந்தியப் பிரதமரின் யாழ்ப்பாண விஜயம்-

anurathapuram_01modi_milkஇலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். பின்னர் யாழ் நூலகத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இங்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர், இலங்கைக்கும் இந்தியாவுக்கு பௌதீகமான தொடர்புகள் மட்டுமின்றி, கலாச்சாசர ரீதியான விடயங்களில் ஒன்றுப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவார்கள். யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்திற்கான நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி. யாழில் நிர்மாணித்து கொடுக்கப்படும் கலாச்சார நிலையம் மிகவும் புரதன நுட்பம் வாய்ந்த கலாச்சார விடயங்களை அடையாளப்படுத்த போகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகம் உலகத்தின் மிகப் பெரிய நூலகமாக இருந்துடன் அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன. பின்னாளில் அது எரிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட புத்தங்களை நாங்கள் வழங்குவோம். மிகவும் பிரசித்தமான மற்றும் முக்கியமான புத்தகங்களை வழங்குவோம். நூலகம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் இடம். எடுத்துக்கொண்ட பணிகளை எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி செய்துமுடிப்போம். யாழில் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் அமையும். தலைமன்னார் ரயில் பாதையை திறந்து வைத்து, கலாச்சார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவது, வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைப்பது என்பன திரிவேணி சங்கம் போன்றது என கருதுகிறேன் என்றார்.

ஆலயங்களை காணவில்லையென மக்கள் தெரிவிப்பு-

aalayankalai kaanavillai (1) aalayankalai kaanavillai (2)வளலாய் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் என 10க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக தங்கள் காணிகளை பார்வையிடச் சென்ற மக்கள் தெரிவித்துள்ளனர். உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே-284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை நேற்று அங்கு சென்று அடையாளப்படுத்தினர். இதன்போதே அந்த மக்கள் இவ்வாறு கவலை வெளியிட்டனர். அவர்கள் கூறுகையில், எமது கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பல வீடுகள் ஆகியவற்றை இடித்தழித்த இராணுவத்தினர், அந்நிலங்களில் விவசாய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பிரசித்தி பெற்ற இந்து ஆலயமான தேனார்ஓடை பிள்ளையார் கோவில் இடித்து அழிக்கப்பட்டுள்ளதுடன் அக்கோயிலின் தேர் மற்றும் வாகனங்கள் என்பவற்றுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. அத்துடன் மேலும் சில இந்து ஆலயங்களும் இடித்து அழிக்கப்பட்டுள்ளன. இடித்து அழிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் விக்கிரகங்களின் சிலவற்றை, பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இராணுவத்தினர் கொண்டுசென்று வைத்துள்ளனர். பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயமான லூதர் மாதா தேவாலயமும் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழில் இருந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல்களில் ஒன்றான ‘பாம் பீச்’ எனப்படும் ஹோட்டல் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் போராட்டம்-

kavana eerppu jaffna (1) kavana eerppu jaffna (3)யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னேடுக்கப்பட்டது. யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றுகாலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணிவரையில் இவ்வாறு போராட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக இந்திய துணைத்தூதரகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரியிடம் இந்திய பிரதமருக்கு கையளிக்க கோரி மகஜர் ஒன்றினையும் வழங்கியுள்ளனர். போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த நிலங்களில் குடியமர்த்தல், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பூரணமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தல், மீள்குடியேற்ற மக்களுக்காக வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை எட்டரை இலட்சமாக வழங்குதல், இந்திய – இலங்கை மீனவர்களது பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல், வளங்களை அழிக்கும் தொழில் முறையைத் தடை செய்தல், இழுவைப்படகால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், சரணடைந்தவர்களை மீள ஒப்படைத்தல், காணாமற்போனவர்கள் தொடர்பில் தகுந்த பதில் வழங்குதல், போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கியே குறித்த போராட்டம் நடாத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு 13 வருட சிறைத்தண்டனை-

maldive former presidentபயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது நஷீட்டின் ஆட்சிகாலத்தில் 2012 ஆம் ஆண்டு நீதிபதியொருவரை தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என குற்றவியல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நடுவர் குழாம் நேற்று தீர்ப்பளித்துள்ளது மொஹமட் நஷீட்டின் கைது அரசியல் நோக்குடையது என அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான உரிமை நஷீட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும், அரச தரப்பு சாட்சிகள், பொலிஸார் மற்றும் நீதிபதிகளால் பயிற்சியளிக்கப்பட்டுள்ள சாட்சிகள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி யாமின் அப்துல் கையூமை எதிர்த்துப் போட்டியிட மொஹமட் நஷீட் தீர்மானித்திருந்தார்.

இந்தியப் பிரதமர் தலைமன்னாருக்கான ரயில் சேவை ஆரம்பித்து வைப்பு-

rail service (2)இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னாருக்கு விஜயம் செய்து, மன்னார்- தலைமன்னாருக்கிடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் இன்றுகாலை வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அதற்கமைய தலைமன்னார் பியர் பகுதிக்கு இந்திய விமானப்படையினரின் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த மோடி தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைத்ததுடன் மடுவுக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைத்துள்ளார். தலைமன்னாரில் மோடிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்ததாக கூறப்படுகின்றது.

பகீரதிக்கு பிணை வழங்கப்பட்டது-

baheerathi releasedகே.பி. என்கிற குமரன் பத்மநாதனின் நிதி உதவியாளரும் நெருங்கிய உதவியாளருமான சுப்பிரமணியம் ஜெயகணேஷின் மனைவி 2லட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணை மற்றும் இரண்டு ஆட்பிணையிலும் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகலவினால் நேற்று விடுவிக்கப்பட்டார். சந்தேகநபரான பகீரதி முருகேசு தனது 8வயது மகளுடன் பிரான்ஸ் செல்வதற்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்த போது மார்ச் 2ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். அவர் அன்றே நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நேற்று முன்தினம் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவர் புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்றவர் எனவும் யுத்தம் முடியும் வரை கடற்புலியாக செயற்பட்டார் எனவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தமது அறிக்கையில் கூறியிருந்தனர். இந்தப்பெண், புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகளின் ஆயுத கொள்வனவாளர் குமரன் பத்மநாதன் ஆகியோரிடம் நெருக்கமாக இருந்த சுப்பிரமணியம் ஜெய்கணேஷ் என்பவரை திருமணம் செய்து பிரான்ஸ{க்கு குடிபெயர்ந்ததாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர் புலிகள் இயக்கத்தை சர்வதேச அளவில் மீள்கட்டமைக்க முயன்றவர் எனவும் சட்டமா அதிபர் இவர்மீது மேல்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர விரும்பியுள்ளார் எனவும் கூறினர். ஆயினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய அவருக்கு பிணை வழங்குவதை எதிர்க்கவில்லை சந்தேக நபரை புலிகள் இயக்கத்தவர் என பொலிஸார் கூறியபோதும் அதற்கு ஆதாரம் இல்லையென சிரேஷ்ட வழக்குரைஞர் கே.வி. தவராசா கூறினார். டீஅறிக்கை அறிவிக்காமல் அவரை விடுவிக்கும்படி கூறப்பட்டுள்ளதென்பதால் அவரை விடுதலை செய்யுமாறு அவர் கூறினார். இவரை பிணையில் விடுவித்த நீதவான் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பொலிஸில் கையொப்பமிடுமாறும் அவருக்கு பணிக்கப்பட்டுள்ளது. வழக்கு மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கதிர்காமம் ஆலயத்தை அரசியல் அழுத்தங்கள் அற்ற இடமாக மாற்ற உத்தரவு-

கதிர்காமம் ஆலயத்தை அரசியல் அழுத்தங்களற்ற இடமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தசாசன அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். பஸ்நாயக்க நிலமே ஒருவரை நியமிக்கும்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராக, உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக இருப்பது தகுதியற்றது என பௌத்த விகாரை கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், கடந்த அரசாங்கம் அதனை இரத்துச் செய்திருந்தது. பஸ்நாயக்க நிலமேயின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்ற போதிலும், அதனை மேலும் இரண்டு வருடங்களாக நீடிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இந்த நடைமுறை செயற்படுத்தப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அதனை அதிகாரமற்றதாக மாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.

தமிழ் தேசிய இளைஞர் கழகம் தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்திற்கு உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_7618IMG_7608பாடசாலை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் நேற்று (12.03.2015) வியாழக்கிழமை நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் நிதியுதவியை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடாக் கிளை வழங்கியிருந்தது. இவ் நிதியுதவியை புளொட் இயக்க முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பாடசாலை அதிபர் திருமதி. பத்மநாதன் அவர்களிடம் கையளித்தார். Read more

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி- (படங்கள் இணைப்பு)

vavuniya saiva01வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று (12.03.2015) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பப்பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை நிகழ்ச்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. Read more