தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு-
அசாதாரண சூழல் காரணமாக வடகிழக்கிலிருந்து வெளியேறி நாட்டின் ஏனைய பாகங்களிலும் தமிழ் நாட்டிலும் வசிக்கும் அகதிகளை பதிவுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியுள்ளன. நேற்றைய தினம் வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிற்குமிடையில் சந்திப் பொன்று இராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட் டுள்ளது. வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் த.சித்தார்த்தன் எம்.பி.யும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட், செயலாளர் ஹசன் அலி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே. எம்.டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர். இச் சந்திப்புக் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடகிழக்கிலிருந்து வெளியேறி நாட்டின் பல பாகங்களிலும் வசிக் கும் மக்களை வாக்காளர் இடாப்பில் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் உள்வாங்கப்படவேண்டும் என ஏகோபித்த குரலில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலமாக புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் அனைவரும் சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டு வாக் காளர் இடாப்பில் இணைத்துக்கொள் ளப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரினார்.அத்துடன் பல்வேறு தேவைகளுக்காக நாட்டின் பல பாகங்களிலும் தமது சொந்த இடங்களிலிருந்தும் வெளியேறி முஸ்லிம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஏதோவொரு வகையில் வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதேநேரம் புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள வடக்கு முஸ்லிம்கள் வாக்காளர் இடாப்பில் பதிவதற்கு வழங்கப்படும் கால எல்லையை அதிகரிக்குமாறு கோரினார். இதனையடுத்து சிறிலங்கா முஸ் லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் இத ற்கு ஒப்பான கருத்தையே வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவிக்கையில், அசாதாரண சூழலின் காரணமாக வடகிழக்கு தாயகங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறி நாட்டின் ஏனைய பாகங்களிலும் தமிழ் நாட்டு அகதி முகாம்களிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை வாக்காளர் இடாப்பில் உள்வாங்குவதற்கு பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டும். அத்துடன் அவர்கள் வாக்களிப்பதற்கான ஏதுநிலைகள் உடனடியாகக் காணப்படாத போதிலும் ஆகக் குறைந்தது மதிப்பீட்டு ரீதியான பதிவொன்றாவது காணப்படுவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயக மும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, குறித்த கரு த்தை ஆமோதித்து அதனை நடை முறைப்படுத்தும் வகையில் புதிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில் தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களை வாக்காளர் இடாப்பில் இணைத்துக்கொள்ளும் வகையில் நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு சட்டமூலம் ஒன்று உருவாக்கப்படவேண்டியுள்ளது எனக்குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணையாளர் இவ்விடயம் தொடர்பாக அதீத கவனம் எடுத்து ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக சிறுபான்மை தரப்பினராகிய நீங்களும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் எழுத்துமூலமான கோரிக்கைகளை முன்வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.