Header image alt text

தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு-

election.....அசா­தா­ரண சூழல் கார­ண­மாக வட­கி­ழக்­கி­லி­ருந்து வெளி­யேறி நாட்டின் ஏனைய பாகங்களிலும் தமிழ் நாட்­டிலும் வசிக்கும் அக­தி­களை பதி­வு­செய்­யு­மாறு தேர்­தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்­பி­ரி­ய­விடம் சிறு­பான்மைக் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் குழு வலியுறுத்­தி­யுள்­ளன. நேற்­றைய தினம் வட­கி­ழக்கைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சிறுபான்மைக் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் தேர்­தல்கள் ஆணை­யாளர் மகிந்த தேசப்­பி­ரி­ய­விற்­கு­மி­டையில் சந்திப் பொன்று இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் இடம்பெற்­றது. இச்சந்­திப்­பின் போதே மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்தப்­பட்­ டுள்­ளது. வடகிழக்கைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் த.சித்­தார்த்தன் எம்.பி.யும் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ­ஹக்கீம், கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரும் அக்­கட்­சியின் பிர­தித் ­த­லை­வ­ரு­மான ஹாபீஸ் நஸீர் அஹமட், செய­லாளர் ஹசன் அலி, ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கே. எம்.டக்ளஸ் தேவா­னந்தா, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான றிசாட் பதி­யுதீன் ஆகியோர் குறித்த சந்­திப்பில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். இச் சந்­திப்புக் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வடகி­ழக்­கி­லி­ருந்து வெளியேறி நாட்டின் பல பாகங்­க­ளிலும் வசிக் கும் மக்­களை வாக்­காளர் இடாப்பில் ஏதேனும் ஒரு பிர­தே­சத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் என ஏகோ­பித்த குரலில் வலி­யு­றுத்­தப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு நீண்­ட­கா­ல­மாக புத்­தளம், சிலாபம் போன்ற பகு­தி­களில் வாழ்ந்து வரும் முஸ்­லிம்கள் அனை­வரும் சொந்த இடங்­களில் குடி­யேற்­றப்­பட்டு வாக் ­காளர் இடாப்பில் இணைத்துக்கொள் ­ளப்­பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான றிசாட் பதி­யுதீன் கோரினார். Read more

மட்டக்களப்பு பட்டதாரிகளின் உண்ணாவிரதம் முடிவு-

graduateமட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு அருகில் கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னாள் அரச நியமனத்தை வழங்குமாறு கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்து 3ஆவது நாளாக இன்றும் மேற்கொண்டனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் சற்று முன்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடிய பின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. இதன்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன் நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்தனர். Read more

இலங்கைக்கு உதவிகளை வழங்க சீனா தயார்-

lanka chinaஇலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் என சீன உதவி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். சீன உதவி வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தது. இதன்போது, இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சீனாவுக்கு தான் மேற்கொண்ட விஜயத்தின்போது சீன ஜனாதிபதியும் அரசாங்கமும் தனக்கு வழங்கிய முழுமையான ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி திருப்தி வெளியிட்டார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளை ஜனாதிபதி பாராட்டினார். இலங்கையை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் பணிகள் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இலங்கையை தென்னாசியாவில் ஒரு முக்கிய நாடாக சீனா பார்க்கின்றது எனக்குறிப்பிட்ட சீன உதவி வெளிவிவகார அமைச்சர் லீ யூ சென்மின், இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீனா வழங்கும் என்றும் தெரிவித்தார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலப்பகுதியிலிருந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அரசியல் தலைமைத்துவத்தை லீயூ சென்மின் பாராட்டினார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகளுக்காக ஜனாதிபதிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
Read more

பொலிஸ் மா அதிபர் சீனாவிற்கு விஜயம், பதில் பொலிஸ் மாஅதிபர் நியமனம்-

illangakoonபொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் உட்பட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர். பொலிஸ் மா அதிபர் தவிர மேலும் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் 05பேர் இந்த விஜயத்தில் பங்கெடுத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேதுங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மதுரட்ட, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கஜசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான ஏ.பி. ரொமேஷ், மற்றும் டீ. எஸ் விக்ரமசிங்க ஆகியோர் பொலிஸ் மா அதிபரின் சீன விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் நேற்று இங்கிருந்து புறப்பட்ட அவர்கள் எதிர்வரும் 15ம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கவுள்ளனர். இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் மீண்டும் நாடு திரும்பும் வரை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ் எம் விக்ரமசிங்க பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த சீனாவின் சிறப்பு பிரதிநிதி நியமனம்-

sri lanka chinaஇலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காக சீனா அரசாங்கத்தினால் சிறப்பு பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் சீனா பிரதிநிதியாக கடமையாற்றியுள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் உப அமைச்சரான லியு ஷென்மின் இதற்காக நியமிக்க்பட்டுள்ளதாக சீனா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான தகவலை ‘சௌத் சைனா மோனிங் போஸ்” என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் முன் எடுக்கப்படும் சீனா முதலீடுகள் தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கருத்து பரிமாறல்களை மேற்கொள்வதே இவரது கடமை என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 6 வருடங்களாக நாட்டில் முன்எடுக்கப்பட்;ட உட்கட்டமைப்பு செயற்திட்டங்களில் 70 சதவீதமான முதலீடுகளை சீனா அரசாங்கமே மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீனா அரசாங்கத்தின் சிறப்பு பிரதிநிதி லியு ஷென்மின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றைய தினம் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் பெறுபேறு-

sddddfdfதரம் 05 புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகியிருக்கின்ற நிலையில் யாஃவடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி சிவநேசன் மதுசாயினி 189 புள்ளிகளைப் பெற்று குறித்த பாடசாலையில் 01 இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் 04 ம் இடத்தை பெற்றுள்ளார். 

அவன்காட் கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்-

navy captainஇலங்கையின் கடல் எல்லைக்குள் பிரவேசித்த அவன்காட் என்ற கப்பல் தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த கப்பல் குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள இந்த கப்பல் இலங்கை கொடியுடன் காணப்பட்டமையால், அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்தமை தொடர்பில் விசாரணை நடத்த முழுமையான அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த கப்பலில் 30 பணியாளர்கள் காணப்பட்டனர். அதன் கப்டன் யுக்ரேய்ன் நாட்டவர். கப்பலில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கப்பல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பூர்வாங்க விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் விசாரணையின் மூலம் கண்டறியப்பட்ட தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக காணப்பட்டதால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு காரணமாக குறிப்பிட்ட கப்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது என கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய உறுப்பினர்களின் விபரங்கள் அனுப்பிவைப்பு-

parliamentஅரசியலமைப்பு பேரவையினால் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இன்றுகாலை கூடிய அரசியலமைப்பு பேரவையின் நிறைவேற்று சபையினால் குறித்த ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதியின் அனுமதியைப் பெறுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் கூடிய அரசியலமைப்பு பேரவை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 4ம்திகதி கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அன்றையதினம் சுயாதீன ஆணைக்குழுக்கள் சம்பந்தமான இறுதித் தீர்மானம் எடுக்ககப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்திலிருந்து 73 இலங்கையர்கள் நாடு திரும்பல்-

refugeesதமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த 73 இலங்கையர்கள் நேற்றைய தினம் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இந்த தகவலை இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள், 1990ஆம் ஆண்டு யுத்த காலத்தின்போது கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையகம் உதவி வழங்கியுள்ளது. இதேவேளை, குறித்த ஆணையகத்தின் உதவியுடன் 2002 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் வரை இந்தியாவில் இருந்து சுமார் 12 ஆயிரத்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் பரிந்துரை-

sri lanka (4)இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட 4 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் சபாயாநகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். இதற்கமைய, லஞ்ச மற்றும் ஊழல் தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு, மனித உரிமைகள், அரச சேவைகள் மற்றும் தேசிய காவற்துறை ஆகிய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகளுக்கான அனுமதியினை பெற்று கொள்வதற்காக அவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்-வீ.ஆனந்தசங்கரி-

ANANDASANGAREEபல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அவர்களில் அநேகருடைய குடும்பங்கள் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இலங்கையில் பொதுமன்னிப்பு என்பது புதிய விடயம் அல்ல. ஏற்கனவே இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் பலர் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியை தாக்கியவர் கூட பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டார். பல வருடங்கள் சிறையில் விசாரணைகள் எதுவுமின்றி இருக்கின்றார்கள். ஒரு சிலருக்கு இப்போது விசாரணைகள் நடைபெற்று தற்போது குற்றவாளிகளென இனங்காணப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்கள்.  ஒட்டு மொத்தமாக பார்க்குமிடத்து ஒரு குற்றத்திற்கு எத்தனை வருட தண்டனையோ அதைவிட கூடுதலான வருடங்கள் சிறையில் விசாரணைக்கைதியாக இருந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து தற்போது நாட்டில் நடப்பது நல்லாட்சிதான் என்று மக்கள் எண்ண வேண்டுமானால் இவர்கள் அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும். Read more