லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர், சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்-

briberyலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டைடஸ் போதிபால வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆணைக்குழுவின் மற்றும் சில பதவிகளுக்கு நீதியரசர் லால் ரஞ்சித் சில்வா மற்றும் சந்தரநாத் நெவில்லே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி அதன் தலைவராக பேராசிரியர் சிறி ஹெட்டிகே நியமிக்கப்பட்டுள்ளதோடு, அன்டன் ஜெயநாதன், எம்.பீ.எச்.மனதுங்க, வை.எல்.எம்.ஷவாகீர் மற்றும் சாவித்திரி விஜேசேகர ஆகியோரும் இதல் அடங்குகின்றனர். இதேநேரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் தலைவராக தர்மசேன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.சலாம், வீ.ஜெகராஜசிங்கம், நிஹால் செனவிரத்ன, டாக்டர் பிரதீப் இராமானுஜம், எம்.எஸ்.செனவிரத்ன, தாரா விஜயதிலக, டீ.எல்.மென்டிஸ், எஸ். ரணுக்கே, சரத் ஜயதிலக ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒஸ்லோ துணை மேயராக இலங்கைத் தமிழ்ப் பெண் தெரிவு-

norway tamil ladyநோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவின் துணை மேயராக 27 வயது இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நோர்வேயில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் கம்சாயினி குணரட்ணமும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2011ஆம் ஆண்டு நோர்வே தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இவர் உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பிறந்த இவர் தனது 3 ஆவது வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாகச் சென்றிருந்தார். தற்போது 27 வயதில் தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா கல்லாண்டகுளம் சுற்றுலாத்தலம் மேம்பாடு குறித்த கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

20151012_155040வவுனியா கல்லாண்டகுளத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலத்தினை மேம்படுத்துவதற்காக வட மாகாண சபையின் உள்ளூராட்சி அமைப்பினால் ரூபாய் 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான வேலைத்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் அண்மையில் கல்லாண்டகுளம் நாதன் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், சனசமூக நிலய உத்தியோகத்தர் வஜீபா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ராயப்பு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டிருந்தனர். 20151012_160657 20151012_161333 20151012_165403