தமிழ் தேசிய பணிக்குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி-

vinaதமிழ் தேசிய பணிக்குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி, துணைத் தலைவர்களில் சிரேஸ்ட்ட சட்டத்தரணி சி,வி.விவேகானந்தன், ந.ச.ச.க கட்சியின் வி.திருநாவுக்கரசு, சட்டத்தரணிகள், ரத்னவேல், காண்டீபன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டு மீளமைக்கப்பட்டுள்ளதாக, துணைத்தலைவர் மு.தம்பிராசா ஊடக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் டாக்டர் நல்லையா குமரகுருபரன் தொடர்ந்தும் பணியாற்றுவார் என்றும், இன்னும் பல முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பணிக்குழு பற்றி அடுத்துவரும் செய்திக்குறிப்பில் வெளியாகும் எனவும் துணைத்தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.விநாயகமூர்த்தி அவர்கள், தனது தலைமை உரையில் தமிழ் தேசிய பணிக்குழுவிவிற்கு 1985இலிருந்து ஒரு வரலாறு உண்டு முன்னர் கொழும்பு வாழ் தமிழர் பணிக்குழுவாக அமரர்கள் டாக்டர் வேலாயுதபிள்ளை, மாமனிதர் குமார் பொன்னம்பலம், டாக்டர் குமரகுருபரன், விக்டோரியா கல்லூரி முன்னாள் அதிபர் அருணாசலம், அரசியல் ராஜதந்திரி விஜயசிங்கம்,, வி.திருநாவுக்கரசு, முன்னாள் ஐநா நிபுணர் தில்லைக்கூத்தன் நடராசா, சட்டத்தரணி மோகன், சட்டத்தரணி காண்டீபன், வானொலி மாமா சரவணமுத்து என்போர் கட்சியரசியலுக்கு அப்பால் உருவாக்கி முக்கிய விடயங்களில் ஆழமான கருத்துக்களை நிலை நிறுத்தியது எனவே இன்றும் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று அரசியலை நெறிப்படுத்த வேண் தியுள்ளது .எங்களுக்குத்தான் எத்தனை அரசியல் சார்ந்த பிரச்சனைகள். இவற்றை நாம் அணுகுவோம். சுயநலன்களுக்கு அப்பால் தமிழினம் சார்ந்த ,அதன் நலன் கருதி செயற்ற்படுவோம் என ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது சம உரிமையை வலியுறுத்துவதே தமிழ் மக்களின் அபிலாசைகளின் அடிப்படையாகும் என தலைமையுரையாற்றிய விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குமரகுருபரன் அவர்கள், கருத்துரைக்கையில் தலைமைத்துவம் தனித்துவம் காத்து மிளிரக்கூடியதாக அமையவேண்டும். அந்தவகையில் இன்று நான் சுய கௌரவத்துடன் பேசவல்ல அன்றைய அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், எனது தலைவர் குமார் பொன்னம்பலம் என்பாரை நினைத்துப் பார்க்கினேன். விட்டுக்கொடுப்புகள் சாணக்கியத்தில் இல்லாமல் இருக்க முடியாது ஆனால் முழுமையான விட்டுக்கொடுப்பு சரணாகதிக்கு வழிவகுத்துவிடும் என்பதை பொறுப்புள்ள தலைமைகள் முக்கிய விடயமாக கருத வேண்டும் என்றார் எனவும் தமிழ் தேசிய பணிக்குழு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.