Header image alt text

ஊடகவியலாளர்மீதான தாக்குதல், வன்னி ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்-

vanni reporterஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தற்போதும் இலங்கையில் தொடர்ந்த வண்ணமேயுள்ளது இவ்வாறு வன்னி ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் வன்னி மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் சார்பாக அதன் செயலாளர் கி.வசந்தஷரூபன் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்;கையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையின்போது, இந்நாட்டில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் தற்போது இல்லை எனவும் கடந்த காலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாகிய ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், வடபகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஊடக சுதந்திரம் தொடர்பில் அரசாங்கம் கூறும் கருத்துக்களை கேள்விக்குறியாக மாற்றிவிட்டது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை எமது சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. Read more

தாஜூதீன் கொலை விவகாரம், கெப்டன் திஸ்ஸ தப்பிச்செல்ல முயற்சி-

tajudeenபிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரெனக் கருதப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவர், நாட்டை விட்டுக் கடல் வழியாகத் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னிருந்த நிர்வாகத்துக்கு ஆதரவு வழங்கும் கடற்படைப் பிரிவிவைச் சேர்ந்த அதிகாரியொருவரின் துணை, இந்த கெப்டன் திஸ்ஸவுக்கு இருப்பது, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீண்டநாள் ஆதரவாளரும் வாகன சாரதியுமான இவருக்கு, பிரயாணத்தடையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கெனவே பெற்றிருந்தது. தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இயங்கி வருவதாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். Read more

தென்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சவுதி அரேபியாவிற்கு அழைப்பு-

 arjunஇலங்கையின் தென்பகுதியில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்குமாறு சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இந்த அழைப்பினை விடுத்துள்ளதாக அரேபிய செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறான ஓர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் பட்சத்தில் இலங்கையை அண்மித்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு எண்ணெய் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகைகளை மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபிய நிதிக்கொள்கை முகவர் பஹாட் பின் அப்துல்லா அல் முபாரக்குடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கரையோர நகரான ஹம்பாந்தோட்டையில் இந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க முடியுமென அவர் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Read more

வவுனியாவில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்மீது தாக்குதல்-

vavuniyaவவுனியா தர்மலிங்கம் வீதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் ஒருவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் வவுனியா நகர சபையினரால் இன்று முற்பகல் அகற்றப்பட்டது. இதன்போது நகர சபை ஊழியர்களுக்கும், வர்த்தக நிறுவனத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை படம்பிடித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசன்மீது வர்த்தக நிலைய ஊழியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரின் புகைப்படக்கருவிக்கும் சேதம் விளைவிக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்து, நகரசபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து தாக்குதலாளிகளிடம் இருந்து ஊடகவியலாளரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் ஊடகவியலாளர் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெயப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு கூறுகின்றது. வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் யாப்பு குழுவிற்கு தமிழ் பிரதிநிதிகள்-

manoஅரசியல் யாப்பு சம்பந்தமான அமைச்சரவை உபக்குழுவினால் உருவாக்கப்பட்டுள்ள விசேட குழுக்களுக்கு இரண்டு தமிழ் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் குறித்த இரண்டு பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதன்படி எல்லை மறுசீரமைப்பு சம்மந்தமான விசேட குழுவுக்கு மலையக செயற்பாட்டாளர் பி.முத்துலிங்கமும், மக்கள் கருத்தறியும் குழு பேராசிரியர் விஜயசந்திரின் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்று வந்த வன்முறைகளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாத்ரீகர்கள் பாதுகாப்பு கருதி விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்-

sivanolipadaசிவனொளிபாத மலை இவ்வருட யாத்திரை ஆரம்பமானதை தொடர்ந்து அதிகமான யாத்ரீகர்கள் தற்போது சிவனொளிபாத மலையை நோக்கி வருகை தந்தவண்ணம் உள்ளனர். இன்று ஆரம்பமான சிவனொளிபாத மலை யாத்திரை எதிர்வரும் வெசக் பௌர்ணமி வரை 6 மாதங்களுக்கு இடம்பெறும். இதனிடையே, சிவனொளிபாத மலை யாத்திரைக்காக வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவற்துறையால் அவசர தொலைபேசி எண்கள் 5 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நோர்டன் பிரிட்ஜ் – நல்லதண்ணி பிரதேசத்தினூடாவ வருகைதரும் பக்தர்கள் 052-20 555 22, 052 20 555 00 மற்றும் 071 85 911 22 இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பக்தர்களின் அவசர பாதுகாப்பு உதவிகளை தெரிவிக்கலாம். மேலும், இரத்தினபுரி பிரதேசத்தினூடாக வருகை தரும் பக்தர்களுக்காக இரு தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 045 223 22 22 மற்றும் 071 85 913 85 இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிப்பதற்கு பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

120 வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழப்பு-

dead.bodyஇந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாக சென்ற 120 பேர் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், சவுதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்ய உத்தரவிடப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண்ணின் தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மேன்முறையீட்டின் அடிப்படையில் இந்த தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

யாழ். சிறையில் இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது-

jail.......தமது விடுதலையை வலியுறுத்தி யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. பண்டிக்கைக்காலத்தை முன்னிட்டு தமது விடுதலையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி, யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 51 பேரும் இன்றுகாலை உணவை பகிஷ்கரித்துள்ளனர். இந்திய மீனவர்களின் உணவுத் தவிர்ப்பு குறித்து சிறைச்சாலை அதிகாரிகளால் யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் நடராஜா மற்றும் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துதடன் கலந்துரையாடி, உண்ணாவிரதத்தினை நிறுத்துமாறு இந்திய மீனவர்களிடம் கேட்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளினை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பழைய தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும்-

NICபுதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் பழைய அடையாள அட்டை செல்லுபடியாகுமெனவும் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மாத்திரமே புதிய அடையாள அட்டை வழங்கப்படுமெனவும் இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் பன்னிரண்டு இலக்கங்களை கொண்ட இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பழைய அடையாள அட்டை பயன்படுத்துபவர்களுக்கு அது காணாமல் அல்லது தெளிவற்று போனால் மாத்திரமே புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், புதிய இலத்திரனியல் அடையாள அட்டையில், அதன் உரிமையாளரின் சுயவிபரம், கைவிரல் அடையாளம் மற்றும் இரத்த வகையும் உள்ளடக்கப்படவுள்ளது.

நீதிமன்றிலிருந்து தப்பி மட்டு வாவியில் குதித்த கைதி பிடிபட்டார்-

jailமட்டக்களப்பு நீதிமன்றத்திலிருந்து தப்பியோடி வாவியில் குதித்த கைதியை பொலிசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நேற்றுக்காலை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு பொலிசாரினால் அழைத்து வரப்பட்ட கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர், அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள கோட்டமுனை வாவியில் குதித்துள்ளார். இதனையடுத்து பொலிசார் துரிதமாக செயற்பட்டு தோணியில் சென்று அவரை பிடித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக மட்டக்களப்பு பொலிசார் குறிப்பிட்டதுடன், குறித்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இவர் வவுணதீவு பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.

கிளிநொச்சியில் வெடியில் சிக்கி 2 குழந்தைகள் காயம்-

fireகிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் விலங்குகளுக்கு வைத்திருந்த வெடி, வெடித்ததில் இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இவர்கள் அப்பகுதியினூடாக பயணித்தவேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர். விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்த வெடி வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஒருவரை கடத்த ஆதரவு வழங்குவது, கடத்தியவரை அச்சுறுத்துகின்றமை தவறு-பிரதீபா மஹானாமஹேவா-

pradeepa mahanamahewaபட்டப்பகலில் கொழும்பு தெமட்டகொடயில் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தி அச்சுறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவின் 6 பாதுகாவலர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ப்ரியன்த லியனகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவிடம் விசாரணை நடத்தியதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் ஹிருனிக்கா பிரேமசந்திரவிற்கு சொந்தமான டிப்பென்டர் ரக வாகனமும் நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவிற்கு சொந்தமான டிப்பென்டர் ரக வாகனத்தில் சென்றவர்கள் தெமட்டகொட ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய 34 வயதுடைய அமில ப்ரியங்கர அமரசிங்க என்பவரை கடத்திச் சென்றனர். Read more

தேர்தல் வாக்காளர் இடாப்பு இணையத்தளத்தில் பிரசுரிப்பு-

vote2015ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு இன்றுமுதல் தேர்தல்கள் செயலகத்தின் இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வாக்காளர் இடாப்பு இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் வாக்காளர் இடாப்பில் உள்ள பெயரில் குறைப்பாடுகள் காணப்படுமாயின், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருக்கு அல்லது தேர்தல்கள் செயலகத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். றறற.நடநஉவழைn.டம எனும் இணையத்தள முகவரியூடாக 2015ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாலக்க உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்-

nalakaபங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் நாலக்க கொடஹேன உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி இவர்களை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளனர். தனது பதவிக் காலத்தில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்புக்கு 50 இலட்சம் ரூபா நிதி வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கான நாலக்க கடந்த 7ம் திகதி பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட அவரை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியவேளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையிலிருந்து தப்பிய இலங்கைப் பெண்-

 saudi arabiaசவுதி அரேபியாவில் ஆணொருவருடன் தகாத உறவைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு கல்லால் அடித்து கொல்லுமாறு, இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை, சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த பெண் மூன்று வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனத் தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

boatகடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஜி.எம்) கூறியுள்ளது. இது கடந்த வருடத்தை விட 4 மடங்கு அதிகமாகும். இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளாவர். 3695 பேர் கடலில் மூழ்கியுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் ஐ.ஓ.எம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த திங்களன்று எட்டப்பட்டதாகவும், கடல் மற்றும் தரை மார்க்கமாக வந்தவர்களின் எண்ணிக்கை 1,005,504 ஆகும் என்றும் அது கூறுகின்றது. கிரேக்கம், பல்கேரியா, இத்தாலி, ஸ்பெயின், மால்டா மற்றும் சைப்பிரஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் ஊடாக வந்தவர்களே இவர்களாவர். 455,000 பேர் சிரியாவைச் சேர்ந்த அகதிகள், 186,000 க்கும் அதிகமானோர் ஆப்கானில் இருந்து வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக விழிப்புலணற்ற 11 மாணவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்புகள்-(படங்கள் இணைப்பு)

5போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் இயற்கையாக விழிப்புலனற்ற மாணவர்கள் தமது விரிவுரைகளின் போது ஒலிப்பதிவு செய்து பின்னர் அதனை குறிப்பு எடுத்து கற்றுக்கொள்வதற்கு ஒலிப்பதிவு கருவி இல்லாது பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனார் இவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக ஒலிப்பதிவு கருவிகளை தந்துதவுமாறு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட விழிப்புலணற்ற மாணவர்களினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு அமைவாக இன்று வட்டு இந்து வாலிபர் சங்க தலைமைச் செயலகத்தில் சங்கத்தின் செயளாளர் இ.தக்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேருக்கு தலா 8.250 ரூபா பெறுமதியான 11 ஒலிப்பதிவு கருவிகள் மற்றும் 10000 ரூபா பெறுமதியான ஒரு துவிச்சக்கர வண்டி என்பன வழங்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் திரு.வள்ளிபுரம் (பிரதிநிதி ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை நிதியம் லண்டன்) வட்டுக்கோட்டை இலங்கை வங்கி முகாமையாளர் திரு.வே.புவனேந்திரராஜா அராலி சரஸ்வதி மகாவித்தியாலய அதிபர் திரு.ந.சபாரட்ணசிங்கி (சங்க போசகர்) சங்க அங்கத்தவர்கள் மற்றும் விழிப்புலணற்ற யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். Read more

பொறுப்புக் கூறலுக்கு இராணுவம் ஒத்துழைக்க வேண்டும்-அமெரிக்கா-

Fஇறுதிப்போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் நம்பகமான நீதிப் பொறிமுறைக்குப் படையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன், படைத் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டுமெனவும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மூன்றுநாள் பயணமாக கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கலாநிதி அமி சீரைட், இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டங்களிடம், இதனை வலியுறுத்திக் கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை, மூன்று நாள் இலங்கை பயணத்தை கலாநிதி அமி சீரைட் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையில், அவரது பயணம் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மனிதாபிமான உதவிகள், இயற்கைப் பேரிடர்களில் பணியாற்றுதல், வெளிநாடுகளில் அமைதிகாப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பை அதிகரித்தல் போன்றவற்றில் இலங்கை படைகளின் எதிர்கால பங்கு குறித்து ஆராயவே, கலாநிதி சீரைட் கொழும்பு வந்திருந்தார். இவர், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெற்றியாராச்சி, வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா, ஆகியோருடன், பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு, பயிற்சி மற்றும் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஆளனி உதவி வழங்கல், உள்ளிட்ட இலங்கை அரசின் முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார். Read more

கடல் நீரை குடிநீராக்க வேண்டாமென வலியுறுத்திய போராட்டம் நிறைவு-

uyuyவடமராட்சி கடலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ள குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து வடமராட்சி கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இன்றுகாலை மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த பிரதேசத்திலிருந்து கடல்நீரை கொண்டுசெல்லும்போது, தமது வாழ்வாதார தொழிலான மீன்பிடி பாதிக்கப்படுமென பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடல்நீரை சுத்தமாக்குவதற்காக அதிவலு கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்போது, அதனால் கடல்வளம் பாதிக்கப்படும்நிலை ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது ஜீவனோபாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோமெனவும் தெரிவித்து மருதங்கேணி மக்கள் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் ஸ்தலத்துக்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், “கடல் நீரை குடிநீராக எடுக்கும் திட்டத்தினை நீங்கள் எதிர்க்கும் சந்தர்ப்பத்தில், உங்களின் கோரிக்கைகளை வடமாகாண முதலமைச்சருக்கு தெரியப்படுத்துகின்றோம். Read more