தனது கடப்பாட்டினை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்-
 யுத்தகால துஷ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறும் நடைமுறைகளில் சர்வதேச நீதிபதிகளும், வழக்கு தொடுநர்களும் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதை உறுதிசெய்வதன் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஜனவரி 21ம் திகதி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்கப் போவதில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க போதுமான வல்லுனர்கள், நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலங்கைக்குள்ளேயே உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக இலங்கையரசு சர்வதேச பங்களிப்பை கோரியது, எனவே அதிலிருந்து தற்போது பின்வாங்க கூடாது என, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச பங்களிப்பு குறித்து ஐக்கிய நாடுகளிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமில்லாத ஒன்றல்ல மாறாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதியான வாக்குறுதி என்பதை ஜனாதிபதி மைத்திரிபால புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

லலித் கொத்தலாவல ஊழல் மோசடி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்-
 பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் , இன்று ஆஜராக முடியாது என அவர் அறிவித்துள்ளார். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி குறித்து வாக்கு மூலம் பதிவு செய்வதற்கே முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி. சில்வா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். கொள்ளுபிட்டி காலி வீதியில் நிர்மானிக்கப்படும் கட்டமொன்றின் நிர்மானப்பணியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி குறித்து வாக்கு மூலம் அளிப்பதற்கே அவர் வருகை தந்துள்ளதாக லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் குழுவின் விஜயம்-
 மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹ_சைன் தலைமையிலான குழு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. உள்ளக நல்லிணக்கப்பொறிமுறையின் முன்னேற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு என்பவை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹ_சைனின் இலங்கை விஜயத்தின் முக்கிய விடயங்களாக கருதப்படும் என ஐ நா அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மனித உரிமைகள் ஆணையாளர், ஆளும் மற்றும் எதிர் த்தரப்பு சந்திப்புகளுக்கு அப்பால் வடக்கு விஜயம், சிவில் சமூக சந்திப்புகள், வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளுக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஷிராந்தி ராஜபக்ஷ ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை-
 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜராகவில்லை என, தெரியவந்துள்ளது. இவர் தனது சட்டத்தரணி மூலம் பிறிதொரு தினத்தை இதற்காக கோரியுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் தாம் அவருக்கு வேறொரு நாளை வழங்கவில்லை எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஊடக இணைப்பாளர் என கூறப்படும் மஹிந்த ரத்நாயக்கவுக்கு வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறவே ஷிராந்தி, ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டதாகவும் லெசில் டீ சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு-
 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றவேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.