Header image alt text

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

omanthaiஇலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இறுதி முடிவின்றி தொடர்கின்றது.

வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. Read more

பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எதிரும் புதிருமான ஆர்ப்பாட்டங்கள்

vavuniyaவவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் விடயத்தில் தொடர்பாக, எதிரும் புதிருமான ஆர்ப்பாட்டங்கள் வவுனியாவில் நடைபெற்றுள்ளன.

இதனால், பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் இணக்கம் காண முடியாத நிலையில், இரு கூராகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். Read more

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

collegeவவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை புறநகர்ப்பகுதியாகிய தாண்டிக்குளத்திலா அல்லது நகருக்கு வெளியே ஓமந்தையிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி இறுதி முடிவின்றி தொடர்கின்ற நிலையில், வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் தமது கல்லூரிக்கு எதிரில் தாண்டிக்குளத்தில், இந்த நிலையம் அமையக்கூடாது எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. Read more

சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள்.

swissசுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு புகலிடம் வழங்க இனிமேல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அலுவலகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகமான ளுநுஆ சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு சுவிஸில் புதிதாக புகலிடம் வழங்குவதில் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கண் எதிரில் தமிழர்கள் கொல்லப்பட்டது எப்படி: பெண் சாட்சியம்
 
kumarapuramதனது கண் எதிரிலேயே தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு சுட்டுக்கொன்றனர் என்று இலங்கை திருகோணமலை குமாரபுரம் தமிழர்கள் படுகொலை வழக்கு விசாரணையில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். அதே நேரத்தில் தான் தப்புவதற்கு இராணுவ வீரர் உதவியதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இரு வாரங்களாக தொடர்ந்தும் இடம் பெற்று வரும் குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில் பெண்கள் உட்பட சுமார் 40 பேர் இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர். Read more

விளக்க மறியலில் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ
 
namal kottaகருப்பு பண குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தி செய்யப்படதாமை காரணமாக சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு போலிஸ் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். Read more