Header image alt text

தமிழ் தேசிய இளைஞர் கழக அனுசரணையில் கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-

IMG_3031வவுனியா கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (05.07.2016) முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்திருந்தார். நிகழ்வின் கௌரவ அதிதிகளாக வ.முருகனூர் சாரதா வித்தியாலய அதிபர் திரு பி.நேசராஜா, வ.கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபர் திருமதி ஓங்காரநாதன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். சிறப்பு அதிதிகளாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.சந்திரிக்கா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் திரு முத்தையா கண்ணதாசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்தியகுழு இளைஞரணி செயற்பாட்டாளர் திரு சு.காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) பின்லாந்து இணைப்பாளர் சந்துரு மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் திரு த.நிகேதன், அமைப்பாளர் திரு வ.பிரதீபன் , பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். Read more

குற்றம் இழைத்திருப்பின் தண்டிக்கப்பட வேண்டும்-அமைச்சர் மங்கள சமரவீர-

mangalaஇராணுவத்தைச் சேர்ந்த சிலரோ, அரசாங்கத்திலுள்ள சிலரோ நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தண்டிக்கப்பட வேண்டும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரேமவதி மனம்பேரி சம்பவம் தொடர்பில் இவ்வாறாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் கலந்து கொண்ட பின்னர், இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அப்பாவி மக்களைக் கொலை செய்யும் மோசமான மனநிலை கொண்ட இராணுவம் எம் வசம் இல்லை எனக் குறிப்பிட்ட மங்கள சமரவீர், எவரேனும் குற்றம் செய்திருப்பின் அது உயர்மட்டத்தில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையிலேயே எனவும் தெரிவித்துள்ளார். Read more

முன்னாள் போராளிகள் புலனாய்வுப் பிரிவினரால் கைது-

arrest (30)முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த கேதீஸ்வரன்சா – வித்திரி தம்பதியினர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9.00 மணியளவில் மூன்று வாகனங்களில் சென்றிருந்த இருபதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினராலேயே குறித்த குடும்பம் சுற்றிவளைக்கப்பட்டு இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டபோது குறித்த இடத்திற்கு பெண் பொலிசார் யாரும் வரவில்லை என்றும் இவர்கள் இருவரும் முன்னாள் போராளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கைதுகளால் முன்னாள் போராளிகளும் பொதுமக்களும் பெரிதும் அச்சமடைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா உதவி-

srilanka indiaஇலங்கையில் ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது, தொடர்பான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றுள்ளது. இக் கூட்டத்தில், இந்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, இலங்கை சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், இரு நாட்டு ரயில்வே துறை அதிகாரிகளும், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இலங்கையில் தற்போதுள்ள ரயில்வே வழித்தடங்களை மேம்படுத்துவது, சிக்னல்கள், தொலைத் தொடர்பு வசதிகள் ஆகியவற்றை நவீனப்படுத்துவது உட்பட சில முக்கிய விவகாரங்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். இதன்போது, இலங்கையில் ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்தியா நிதியுதவி செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாலாயிரம் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்-

electricity boardஇலங்கை மின்சார சபையுடன் இணைந்த மற்றும் ஆட்பலம், குத்தகை அடிப்படையில் சேவையாற்றிய சுமார் 4ஆயிரம் ஊழியர்கள் செம்டெம்பர் 4ஆம் திகதிமுதல் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட, நீண்ட காலம் சேவையில் இருந்து, மின்மானி வாசிப்பு மற்றும் ஆட்பல வேலைகளில் ஈடுபட்ட சகல ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. செப்டெம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.