Header image alt text

பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டும்-த.சித்தார்த்தன் எம்.பி-

sithadthanபொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலையே அமைக்கப்பட வேண்டும். அதுவே பொருத்தமான இடமாகவும் விளங்குகின்றது. எமது மக்களின் விருப்பமாக இருக்கின்றதுடன் அதனாலேயே மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் ஏற்படும். இதனை விடுத்து சிலர் எங்கள் மக்கள்மீது அக்கறை கொள்வது போன்று நடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மத்திய நிலையம் அமைவது தொடர்பில் ஏற்பட்டிருக்கின்ற இழுபறி நிலைமை தொடர்பாகவே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், Read more

பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக ஊடகக்குழு-

policeபொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக ஊடக குழுவை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் தலைவர்களாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான அஜித் ரோஹன மற்றும் பிரியந்த ஜெயக்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் 2ம் திகதி பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் மீண்டும் குண்டு வெடிப்பு-

wertrtrபங்களாதேஷில் ரம்ழான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடித்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அண்மையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்றுகாலை இவ்வாறு குண்டு வெடித்துள்ளது. மேலும் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திருகோணமலை விபத்தில் ஒருவர் பலி, இருவர் காயம்-

accident (12)திருகோணமலை அலஸ்தோட்டப் பகுதியில் நேற்று இரவு துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் பாலையூற்றைச் சேர்ந்த எம்.சித்ரவேல் மெனி (வயது 62) என தெரியவந்துள்ளது. இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன், விபத்தில் உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அநுர சேனாசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு-

anura senanaike policeறக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாசநாயக்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டள்ளது.

கொழும்பு கோட்டை பிரதம நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுர சேனாநாயக் தொடர்பில் பிணை மனு தாக்கல் செய்வதாயின் அதனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மலையாளபுர மக்கள் குடிநீரின்றி அவதி-

asdfsdகிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட மலையாளபுரம் கிராம மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் தமக்கு உடனடியாக குடிநீர் விநியோகத் திட்டமொன்றை அமைத்துக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மலையாளபுரம் கிராமத்தில் வாழும் 130 குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கிளிநொச்சி நகரிலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட மலையாளபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 130 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்ற போதிலும் 30 குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிக்கக்கூடிய திட்டமொன்று கடந்த மே 12ம்திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read more

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களை குடியமர்த்த செயலணி-

kayanthaவடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்களை மீள் குடியமர்த்துவதற்கு விசேட செயலணியொன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதேவேளை மீள்குடியேற்றம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு நடைமுறைப்படுத்திய திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் அமைச்சரவைக்கு முன்வைத்த தகவல்கள் குறித்தும் அமைச்சரவை தனது கவனத்தை செலுத்தியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக மேற்கண்ட அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்தார்.

Read more