Header image alt text

யாழ். கல்விளான் காந்திஜீ சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016-(படங்கள் இணைப்பு)-

kalvilan5யாழ். கல்விளான் காந்திஜீ சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நிகழ்வானது 28.07.2016 அன்று முன்பள்ளியின் தலைவரின் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விளையாட்டுப் போட்டியினை ஆரம்பித்து வைத்தார். இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. Read more

முல்லை. மகளிர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் மாவட்ட பயனாளிகளுக்கும் தையல் இயந்திரம், சமையல் உபகரணங்கள், தளபாடங்கள் அன்பளிப்பு-படங்கள் இணைப்பு-

DSC04458முல்லைத்தீவு மணற்குடியிருப்பு பகுதியில் கிராமிய மீன்பிடி மற்றும் மீன்பிடி அமைச்சின் மூலம் மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் ஊடாக முல்லைத்தீவு பல்வேறு மகளிர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் மாவட்ட பயனாளிகள் சிலருக்கும் தையல் இயந்திரம், சமையல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. மேற்படி நிகழ்வில் கௌரவ மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமைச்சின் செயலாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் (பவன்), துரைராசா ரவிகரன்

மற்றும் மாவட்ட திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அத்துடன் முல்லை மாவட்ட பங்குத்தந்தை மேலும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர் மேலும் இந்நிகழ்வை எழுத்தாளர் புரட்சி தலைமை ஏற்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

வட்டு. இந்து வாலிபர் சங்கம் ஊடாக லண்டன்வாழ் உறவின் தொடர் உதவிகள்-(படங்கள் இணைப்பு)-

vaddduவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்களால் யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த கடந்தகால யுத்தத்தின்போது முற்றாக பார்வையிழந்த செல்வி.அற்புதராஜா அனித்தலா என்பவருக்கு முதற்கட்டமாக ஒரு மாத காலத்திற்க்கு தேவையான ரூபா 10,000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அவர்களது இல்லத்தில் வைத்து இன்று கையளிக்கப்பட்டன. செல்வி.அ.அனித்தலா இறுதி யுத்தத்தின்போது ஒட்டிசுட்டான் பகுதியில்; தனது இரு கண்களையும் இழந்துள்ள இவர் தற்போது புத்தூர் பகுதியில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகின்றார். அண்மையில் இவரது தாயாரினால் எமக்கு தொலைபேசி; மூலம் விடுக்கபட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் மனிதாபிமான கைங்கரியம் இடம்பெற்றது. அவரின் தாயார் தெரிவிக்கும்போது, நான் கணவன் அற்ற நிலையில் முத்த மகனை போராட்டத்தின்போது இழந்து, திருமணமாகாத முற்றாக பார்வையிழந்த எனது மகள் அனித்தலாவும் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட புத்தி சுயாதீனம் குறைந்த மகளும் அவரின் ஐந்து பிள்ளைகளுமாக பல இன்னல்களுடன் வாழ்க்கையை ஓட்டிவருகின்றோம் என்று கூறியதோடு, தாம் அன்றாட உணவுக்குக்கூட கஸ்டபடுவதாகவும் தான் செய்யும் கூலி தொழில்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். Read more

ஆணைக்குழு விசாரணைகளில் கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படவில்லை-

DSC_00661-720x480 (2)காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது எமது கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படாததுடன், எமது கவனத்தை திசைதிருப்பும் முனைப்பிலேயே அவர்கள் செயற்பட்டனர் என காணாமல்போன இளைஞனின் தாயொருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான வலய செயலணி இன்று மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த தாய் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் விசாரணைகளுக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் இன்னும் வீடு திரும்பவில்லை. கடந்த காலங்களில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் நிலவியமையால் இந்த உண்மையை வெளியிட தயங்கினேன். அதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றபோது எமது கருத்துக்களை வழங்க உரியநேரம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி விசாரணைகளை மேற்கொண்டவர்கள், வாழ்வாதாரத்திற்கு ஆடு, மாடு தருவதாகவும், நட்டஈடு தருவதாகவும் கூறி எங்களுடைய கவனத்தை திசை திருப்புவதிலேயே முனைப்பாக செயல்பட்டனர். கடந்த 2008, 2009ம் ஆண்டுகளில் விசாரணைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் எனது மகன் அவ்வாறு கொல்லப்படவில்லை. எனது மகன் எங்கேயோ ஒரு இரகசிய தடுப்பு முகாமில் தற்போதுவரை உயிரோடு இருக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் வடக்கிலேயே அமைக்கப்படவேண்டுமென வலியுறுத்தல்-

DSC_0042காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை களை மேற்கொள்ளும் அலுவலகம் கொழும்பில் அமைக்க கூடாது. அது வடக்கில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் ஒன்றிலேயே அமைக்கப்பட வேண்டும் என மன்னார் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்கான வலய செயலணி இன்று காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த செயலணியானது, நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும், காணாமல்போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக பல வருடங்களாக நீதிமன்றங்களில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் துரிதப்ப டுத்தப்பட வேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆறு மாதங்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன், காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து சர்வதேசத்தின் தலையீட்டுடன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, இவர்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதி குழுவினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும் காணாமல் போனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்க முடியாது எனவும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கக்பட்டதோடு சொத்து இழப்புகளுக்கு மாத்திரமே இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க…. Read more