கிளிநொச்சி அறிவியல் நகரில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் அங்குராப்பணம்-
இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் கிளிநொச்சியில் நிறுவப்பட்டிருந்த இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகரில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் காணியிலேயே இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் இன்றுகாலை 10மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இதற்கான நிர்மாணப்பணிகள், சாதனங்கள் வழங்கல், இயந்திரங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றுக்காக ஜேர்மன் அபிவிருத்தி வங்கியினால் 8.4 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்ட ஒரு தொழிற்பயிற்சி நிறுவனமே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திறன்விருத்தி மற்றும் தொழிற்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இந்திய உயர்ஸ்தானிகர் நடராஜன், பாராளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், மஸ்தான், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் தசைநார் பயிற்சி இயந்திரம் அன்பளிப்பு-

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டன் நாட்டைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரினால் வட்டு இந்துக் கல்லூரி விசேட தேவைக்குரிய மாணவர்களின் அலகுக்கு ரூபா 16,250 பெறுமதியான தசைநார் பயிற்சி இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பமானது வட்டு இந்து கல்லூரி அதிபரினால் எமது சங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இவ் இயந்திரம் கல்லூரியில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிhர் சங்க தலைவர் கு.பகீதரனால் வழங்கி வைக்கபட்டுள்ளதுடன் ஏற்கனவே இப் பாடசாலையின் விசேட தேவைக்குரிய மாணவர்களுக்கு எம்மால் தையல் இயந்திரம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது. இவ் விசேட தேவைக்குரிய மாணவர்களுக்கு உற்ச்சாகத்தை ஊக்குவித்து அவர்களின் பிறப்பிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து இவர்களும் ஏனைய மாணவர்கள்போல் சமூகத்தில் வாழ வைப்பதே எங்களின் அவா. இவ் கைங்கரியத்தை செய்ய முன்வந்த லண்டனைச் சேர்ந்த அ.கிருபாகரன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரும் பாடசாலை சமூகமும் நன்றிகள் தெரிவிக்கிறோம். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)-
பத்திரிகை அறிக்கை-
முல்லைத்தீவு, கேப்பாபிலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி நடாத்த முற்படுகின்ற சாத்வீகப் போராட்டத்தினை கைவிடத் தூண்டும் முயற்சிகள் தமிழ் அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கசியும் செய்திகள் குறித்து நாம் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.
பாதிக்கப்பட்ட மக்கள் யாராகிலும், தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதற்கு அவர்களுக்குள்ள உரிமைகளை மறுக்க அல்லது பலவீனப்படுத்த அல்லது அதன் நோக்கங்களை திசைதிருப்ப எவருக்கும் உரிமை கிடையாது. காலத்துக்குக் காலம் அறவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தமிழ் அரசியல் தலைமைகளாலும், அரச மற்றும் படைத்தரப்பு அதிகாரிகளாலும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டு அவை கைவிடப்படுகின்ற நீண்ட அனுபவத்தை கொண்டவர்கள் கேப்பாபிலவு கிராம மக்கள். Read more