Header image alt text

நல்லிணக்க முயற்சிகளுக்கு கனடா உதவும்-கனேடிய வெளியுறவமைச்சர்-


canadian forign minister met Pஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனேடிய அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையின் நீதிமன்ற முறைமையினை பலப்படுத்தி ஜனநாயத்தை வலுவடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கனேடிய வெளியுறவு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வரா, கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கே.ஏ.ஜவாட், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி விட்டின் உள்ளிட்ட கனடா நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அதீத இராணுவப் பயிற்சியால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கருக்கலைவு-

klhhமன்னார் சன்னார் கிராம பகுதியில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதீத ஆயுதப்பயிற்சியால் அக் கிராமத்திலுள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு, திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான, வலய செயலணி இன்றுகாலை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த செயலணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த, சன்னார் கிராமத்து இளைஞர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரின் பயிற்சி முகாமில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மக்களின் குடியிறுப்பு காணப்படுவதாகவும், இராணுவ பயிற்சி முகாமில் மோட்டார் செல் பயிற்சி, கண்ணிவெடி செயலிழப்பு, கைக்கண்டு பயிற்சி மற்றும் துப்பாக்கி சூட்டு பயிற்சி போன்றவை இடம் பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான பயிற்சி நடவடிக்கைகளின்போதே, பாரியளவிலான அதிர்வுகள் ஏற்படுவதாகவும், இதன் காரணத்தினால் குறித்த கிராமத்திலுள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அறுவரை சந்தேகநபர்களாகப் பெயரிட அனுமதி-

namalநிதி மோசடி சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவரை சந்தேகநபர்களாகப் பெயரிட கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் வழங்கிய தகவலை கருத்தில் கொண்டே கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு ஹேலோ கோப் எனும் நிறுவனத்தின் 45 மில்லியன் ரூபா பெறுமதியான பங்கை பெறுவது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த விசாரணை தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் இந்திக்க பிரபாத் கருணாஜீவ என்பவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்யுமாறு நீதவான் பிடியானை பிறப்பித்துள்ளார்.

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி-(படங்கள் இணைப்பு)-

vavuniya-telo-280716-seithy (1)கொழும்பு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கும் நேற்றையதினம் (27.07.2016) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜீலை 27ம் திகதி திங்கட்கிழமை வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, ஜெகன், தேவன், நடேசுதாசன், சிவபாதம், சிறீக்குமார், குமார், மரியாம்பிள்ளை, குமாரகுலசிங்கம் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 33ஆவது அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தருமான வினோ நோகராதலிங்கம் அவர்களது தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், வைத்தியக்கலாநிதி சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண அமைச்சர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more