Header image alt text

உறவுகளை நினைத்து உணர்வுடன் 27வது வீர மக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பம்.! (படங்கள் இணைப்பு)

zபுளொட் அமைப்பின் 27வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று 13.06.2016 காலை வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நினைவில்லத்தில் உள்ள கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த அதிதிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களதும், கழகத்தின் மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களதும் உருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவித்தனர். அத்துடன் நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இறைபணிச் செம்மல் செ.வை.தேவராசா(கண்ணகி), சுத்தானந்த இந்து இளைஞர் மன்றத் தலைவர் திரு நா.சேனாதிராசா, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு கு.ரவீந்திரநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு வை.பாலச்சந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு த.யோகராஜா, மற்றும் செயற்குழு உறுப்பினர்களான திரு. குகதாசன், திரு சு.காண்டீபன், மாவட்ட செயற்குழு நிதி பொறுப்பாளர் நிசாந்தன், மாவட்ட குழு உறுப்பினர்களான ஆட்டோ சங்கத் தலைவர் ரவி, மூர்த்தி ஆகியோருடன் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். Read more

சுவிஸில் 10 யூலை 2016 நடைபெற்ற வீரமக்கள் தினம் (படங்கள் இணைப்பு)

DSC02034புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் கடந்த 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 14.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில், கழகதோழர்கள், ஆதரவாளர்கள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பெரியோர்கள், குழந்தைகளென பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக, மங்கள விளக்கை தோழர்கள் மனோ, சித்தா, கைலாசநாதன் (குழந்தை), ஜெர்மன் கிளைத் தோழர் யூட், திருமதி.சுகந்தினி இரதீஸ்வரன் (தீபன்), திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், திரு.இரத்தினகுமார் ஆகியோர் ஏற்றிவைக்க, இதனைத் தொடர்ந்து மரணித்த அனைத்து அமைப்புக்களின் தலைவர்கள், போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் மலரஞ்சலி செய்யப்பட்டது. Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இருதய சத்திர சிகிச்சைக்கான நிதி அன்பளிப்பு-

dfdfdநேற்று (12.07.2016) செவ்வாய்க்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக யாழ். உடுவிலைச் சேர்ந்த பரமனாதன் இராணி என்பவரின் இருதய சத்திர சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த துஸ்சியந்தன் அவர்களால் 25,000 ரூபாவும் லண்டன் நாட்டை சேர்ந்த லோகஞானம் அவர்களால் 10,000 ரூபாவும் சுழிபுரத்தை சேர்ந்த பாலா என்பவரினால் 5,000 ரூபாவுமாக சத்திர சிகிச்சைக்காக ரூபா 40,000 வங்கியில் வைப்பிலிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கி வைக்கபட்டுள்ளது. மேற்படி விண்ணப்பமானது அவரது மகள் ப.ரேகா என்பவரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடந்த 24.06.2016 அன்று முன்வைக்கபட்டது. அவர் தெரிவிக்கையில் 1990ம் ஆண்டு தாங்கள் தையிட்டி காங்கேசன்துறை மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து உடுவில் தெற்கு புதுமடம் மானிப்பாயில் வசிக்கின்றோம். 2 பெண் பிள்ளைகளை சுமையாக தாங்கி வயதான தந்தையுடன் வாழ்கின்றோம். தற்போது எனது தாயாருக்கு இதயத்தில் 4அடைப்புகள் இருப்பது கண்டுபடிக்கபட்டுள்ளது. நாங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை கூட பூர்த்திசெய்ய முடியாத வறுமைக்கோட்டின் கிழ் வாழ்ந்து வருகின்றோம். லங்கா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு ரூபா 800,000 தேவையாக உள்ளது. Read more