Header image alt text

தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது-பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்-

D.Sithadthan M.P,.தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழத்தேசியம் தடுமாறக்கூடாது என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்’ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் நடைபெற்ற “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்” எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வுநிலை, கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது. ஏனென்றால், ஆரம்பத்தில் அகிம்சை என்ற தடத்தில் சென்றோம். பின்னர் ஆயுதப்போராட்டம் என்ற நிலையில் சென்றோம். தற்போது ஜனநாயகம், அகிம்சை என்ற தடத்திற்கு வந்திருக்கின்றோம். ஆனால் நிச்சயமாக தமிழ்த்தேசியம் என்பது அறுபது வருடங்களாக தாய் குழந்தைக்கு பாலூட்டுவது போன்று எம் அனைவருக்கும் ஊட்டி வளர்க்கப்பட்ட விடயம். அது மாத்திரமன்றி தேசிய உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் தானாக உருவாகின்ற உணர்வாகும். ஆகவே அது தடுமாறுவதற்கு மக்கள் விடமாட்டார்கள். நாமும் நிச்சயமாக தடுமாற மாட்டோம். Read more

மருத்துவ மற்றும் சித்த பீடங்கள் நாளை ஆரம்பம்-

jaffna university managementயாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவ பீடங்களின் மாணவர்களுக்காக விரிவுரைகள் நாளை 20ஆம் திகதி ஆரம்பிக்கபடவுள்ளதோடு, விவசாய பீடத்தின் பரீட்சைகளும் இடம்பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி சிங்கள மற்றும் தமிழ் மாணவக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே, துணைவேந்தர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், மோதல் சம்பவம் அனைவரையும் மனவருத்ததுக்கு உட்படுத்தியுள்ளது. சம்பவம் ஏற்பட்டு ஒரு மணிநேரத்துக்குள் நிலைமை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தும் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழக அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தபட்டிருந்தன. இது மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற ஒரு மோதல் ஆகும். கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து மூவின மாணவர்களும் பாதுகாப்புடனும் எவ்வித பிரச்சினையும் இன்றி கல்விச் செயற்பாட்டை தொடர்ந்து வருகின்றனர்.
Read more

தனியார் கல்வி நிலையங்களில் சிறுவர் பாதுகாப்பு கலந்துரையாடல்-

ddfdfdகிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய, மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஹம்சநாதன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கரைச்சி பிரதேச தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக, கல்வி நிலைய கட்டடங்களை உரிய முறையில் அமைத்தல், குடிநீர் வசதி மற்றும் மலசலகூடங்களை மாணவர் தொகைக்கமைய அமைத்தல், மாலை நேர வகுப்புக்களை மாலை 6 மணிக்கு முன்பாக நிறைவுக்கு கொண்டுவருதல், இரவு நேர வகுப்புக்களை தவிர்த்தல், குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் விசேட வகுப்புகளை நடாத்துவதை தவிர்த்தல், மாணவர்களின் உடல், உள நலங்களை அறிந்து செயற்படுதல், சிறுவர் துஷ்பிரயோகத்தை தவிர்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன. Read more

பாடசாலை சென்ற மாணவியைக் காணவில்லை-

missingமட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 16வயது மாணவி நேற்று வழமை போன்று பாடசாலைக்கு சென்றுள்ளார். குறித்த மாணவி இதுவரை வீடு வந்து சேரவில்லையென குறித்த மாணவியின் பெற்றார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளளனர். குறித்த மாணவியுடன் கல்வி கற்கும் சக வகுப்பு மாணவிகள் பாடசாலை முடிந்து வீடு வந்து சேர்ந்த போதிலும் மேற்படி மாணவி இதுவரை வீடு வந்து சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி மாணவி பாடசாலை சீருடையுடன் வீட்டை விட்டு பாடசாலைக்கு செல்வதாக கூறி சென்றபோதிலும் குறித்த மாணவி பாடசாலைக்கு செல்லவில்லையெனவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும் செய்திகளை வாசிக்க…… Read more

வவுனியாவில் சுவாமி விபுலானந்தா அடிகளாரின் 69வது சிரார்த்த தின நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-
dsdsசுவாமி விபுலானந்தா அடிகளாரின் 69ஆவது சிரார்த்த தின நிகழ்வு இன்று (1907.2016) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றுள்ளது. வவுனியா தனியார் பேரூந்து தரிப்பிடத்திலுள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் மேற்படி நிகழ்வினை வவுனியா தமிழ்மா மன்றம், நகர வரியிறுப்பாளர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வில் அன்னாரின் சிலையினை நிறுவிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வை. பாலச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான  ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன் மற்றும் தமிழ் மாமன்றத் தலைவர் கிருபானந்தகுமார், வைத்தியர் மதுகரன், கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், நகர வரியிறுப்பாளர் சங்கத்தலைவரும் தமிழ் விருட்ச சமூக ஆர்வலருமான சந்திரகுமார்(கண்ணன்) வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, அயல் பாடசாலை அதிபர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்த கொண்டிருந்தனர்.  Read more