கறுப்பு யூலையின் 33ம் ஆண்டு நினைவுதினம்-

dsfdfdfdகறுப்பு யூலையின் 33ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை மாதம் 23ம் திகதியாகிய இன்றையதினம் முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. 1983 ஜூலை 23ம் திகதி யாழ். திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்களின் கெரில்லாத் தாக்குதலில் 13படையினர் பலியானதைத் தொடர்ந்து தமிழ் மக்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும் இழந்து அநாதரவாக்கப்பட்டனர். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைத் தொடர்ந்தே இன விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் தம்மை இணைத்துக் கொண்டனர். இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும், இன்னும் பல்வேறு நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒட்டுசுட்டான் பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு-

landமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 74 குடும்பங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள்இ ன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன்போது, பனிக்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 43 பேருக்கு தலா 01 ஏக்கர் மேட்டுக்காணிக்கான அனுமதிப்பத்திரமும், 29 பேருக்கு தலா அரை ஏக்கர் காணிக்கான அனுமதிப்பத்திரமும், 02 பேருக்கு தலா 01 ஏக்கர் வயல் காணிக்கான அனுமதிப்பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த கட்டமாக அனுமதிப்பத்திரம் வழங்கவுள்ளவர்களுக்கான காணிக் கச்சேரியும் இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், பனிக்கன்குளம் கிராம அலுவலர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மலேசியாவில் நினைவுகூரப்பட்ட 27ஆவது வீரமக்கள் தினம்-

fwerereபுளொட்டின் 27ஆவது வீரமக்கள் தினம் மலேசியா டமாங்கிறா டமாய் என்னும் பகுதியில் கடந்த 15.07.2016 வெள்ளிக்கிழமை தோழர் ரியாந்தன் அவர்களின் தலைமையில் நினைவுகூரப்பட்டது.

இதன்போது வீரமக்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்ட மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன.

இந்நினைவுதின நிகழ்வில் கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.           மேலும் செய்திகளை வாசிக்க…… Read more