Header image alt text

துணுக்காய், பாண்டியன்குளம் பகுதியில் 20 குடும்பங்களுக்கு மாகாணசபை உறுப்பினர். க.சிவநேசன் உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_0042முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் பகுதிகளைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை வட மாகாணசபை உறுப்பினர். திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் நேற்றுமுன்தினம் (27.07.2016) வழங்கிவைத்துள்ளார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து மேற்படி நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் திரு. சிவபாலசுப்பிரமணியம், துணுக்காய் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட உதவி ஆணையாளர், சமூக ஆர்வலர் தேவா மற்றும் யசோதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

நல்லிணக்கம், பொறுப்புகூறலில் சர்வதேச பங்களிப்பு அவசியம்-ஸ்டீபன் டையன்-

canadaஉள்நாட்டு போரின் பின்விளைவுகள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், உணர்ச்சிபூர்வமான விடயங்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் பொறிமுறைகளில் அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பு அவசியம் என கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டையன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள், நேற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இச்சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கனேடிய அமைச்சர் இவற்றைக் கூறியுள்ளார். இலங்கை மற்றும் கனடாவின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். இலங்கை முன்னெடுத்துள்ள அரசியல் யாப்பு மறுசீரமைப்புக்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதிகளில் சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அதிகளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றை விரைவில் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, நல்லாட்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த கனடா பூரண ஒத்துழைப்பு வழங்கும். அதேவேளை, யுத்தம் காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது-

piyasena former MPதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவி செய்யப்பட்ட அவர் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பீ.எச்.பியசேன பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. கடந்த ஆட்சியின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பிய சேனவுக்கு, பொருளாதார அமைச்சின் கீழ் வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் வண்டி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்று; கைப்பற்றப்பட்டிருந்தது. அரசுக்கு சொந்தமான குறித்த வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து மீண்டும் அரசு பெறுவதற்கு கடந்த வருடங்களில் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அரசு குறிப்பிட்டிருந்தது. எனினும் குறித்த வாகனம் சாரதியுடன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சாரதி நேற்று முன்தினமே சாரதியாக இணைந்து கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்த பியசேன, கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்படி கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூதூரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம்-

volundearsதிருகோணமலை மூதூர் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்றுகாலை இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று மூதூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க….

Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு-

Yஎமது புலம்பெயர் உறவான பிரான்ஸைச் சேர்ந்த உதயகுமார் தர்சினி இன்றைய தினம் தனது தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்கு புதிய துவிச்சக்கரவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின் சிபாரிசின் கீழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக இன்று சங்க தலைமை காரியாலத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தை சேர்ந்த சி.நிரஞ்சிகா மற்றும் வட்டு இந்து கல்லூரியை சேர்ந்த வி.பவாணி ஆகிய இருவருக்கும் இவ் துவிச்சக்கரவண்டிகள் கையளிக்கபட்டன. மேற்படி இரு மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்கும் இவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை தொடர்வதற்கு உதவியாக துவிச்சக்கரவண்டிகள் தந்ததவுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தமது பிள்ளைகள் போன்றும் இவர்களும் கல்வியில் சிறந்து விளங்கி சமூகத்தில் சிறந்த பிரஜையகளாக உருவாக வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் இக் கைங்கரியத்தை தனது தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கி வைத்த உ. தர்சினிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் நன்றிகளை கூறிக்கொள்வதுடன் இவரின் தாயாரான அ.சொர்ணமலர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).
Read more