சார்ஜாவிலுள்ள ஒரு ஹோட்டல் அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று இலங்கையர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த குடியிருப்பில் இருந்த இரு ஆண்கள், பெண்கள் மூவர் தற்கொலை செய்ய முற்பட்டதில், இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, 55 வயதான தந்தை, 54 வயதான தாய் மற்றும் அவர்களது 19 வயதான மகனும் சம்பவத்தில் பலியானதோடு, அவர்களது உறவினர்களாக கருதப்படும் இரு பெண்களே காப்பாற்றப்பட்டுள்ளனர். Read more