Header image alt text

vidya caseபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் என அறியப்படும் மாகாலிங்கம் சசிக்குமார் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதாய விளக்க மன்றால் இன்றுமுற்பகல் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகளுக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார்
03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்
04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்
05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்
06 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்
08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன்
09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read more

IMG_9316புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து யாழ். திருநெல்வேலி வாலையம்மன் சனசமூக நிலையத்திற்கு நேற்று ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கிவைத்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபையில் பிரதேச சபையின் செயலாளர் திரு. சு.சுதர்ஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினரால் திருநெல்வேலி வாலையம்மன் சனசமூக நிலையத் தலைவர் டொக்டர் சி.பத்மராஜன் அவர்களிடம் மேற்படி ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டன. Read more

rohinja muslimsகல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகள் 31பேரும் பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள வீட்டை பௌத்த பிக்குகள் நேற்று சுற்றிவளைத்ததை அடுத்து அங்கு பதற்றமான நிலை தோன்றியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்பின் பராமரிப்பில் கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு வீடொன்றில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 ரோஹிஞ்சா அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். Read more

exam resultsஇந்த வருடத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் தினங்கள், கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2017ம் ஆண்டுக்கான, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஒக்டோபர் 5ம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வெளியாகவுள்ளன. இதேவேளை, 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை மார்ச் 28ம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

land slideதற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற மழைவீழ்ச்சி எதிர்வரும் தினங்களுக்கும் இதேபோன்று தொடருமானால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு குறித்த பிரதேச மக்களிடம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.