Header image alt text

sri lanka podujana peramunaசிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவரும் சிறீலங்கா பொதுஜன முன்னணிக்கு தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.டீ வீரசிங்க, டீ.எம்.ஜயசேன, சந்ரா தெவரப்பெரும ஆகியோரே இவ்வாறு ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்துள்ளனர். Read more

vaikoஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத்தின்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவை (வை.கோபால்சாமி) இலங்கையர்கள் சிலர் தாக்க முற்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சிக்கப்பட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களால் இந்த முற்றுகை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

kurdsஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிந்து செல்வதை ஆதரித்து 92 வீதமானோர் வாக்களித்துள்ளனர். குர்திஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்பில் 72.61 வீதமானவர்கள் கலந்துகொண்டு, வாக்களித்துள்ளனர்.

குர்திஸ்தான் பிரிவிற்கு 2,861,000 பேர் ஆதரவாகவும் 224,000 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த வாக்கெடுப்பானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஈராக் தெரிவித்துள்ளது. ஈராக்கின் வட பகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். Read more

rohinja muslimsமியான்மாரிலிருந்து இங்கு வருகைதந்துள்ள றோகிஞ்சா அகதிகளை நாடுகடத்துமாறும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்குமாறும் கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்தில் மகஜர் ஒன்று நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

சிங்கலே தேசிய சக்தி உள்ளிட்ட அமைப்புகள் பல இணைந்தே, இந்த மகஜரைக் கையளித்துள்ளனர். அந்தக் காரியாலயத்துக்கு முன்பாக காத்திருந்த பிரிவினர், அலுவலக அதிகாரியொருவரிடம் மகஜரை கையளித்ததன் பின்னர், அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். Read more

faiser mustafaதேர்தல் நடத்துவது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருடன் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக உள்ளுராட்சி மன்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தேர்தல் நடத்தும் போது தமது அமைச்சு செய்ய வேண்டியக கருமங்கள் தொடர்பிலும், தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் கடமைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு மிகவும் வினைத்திறனாக அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more