முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேப்பாபிலவு இராணுவ முகாம்களிலிருந்து படையினர் தற்போது வெளியேறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 64 பேருக்கு சொந்தமான காணியே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். முகாம்களிலிருந்து படையினர் முழுமையாக வெளியேறியதன் பின்னர் கேப்பாப்பிலவு பகுதியிலுள்ள காணிகளை மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.