Header image alt text

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சராக ஸ்ரீயானி விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றுகாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதன்போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் உடனிருந்துள்ளார். திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம கூட்டு எதிர்க்கட்சியுடன் செயற்பட்டு வந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டவர்.

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவே எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அவர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உடனடியாக மூடிவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் விசேட கடிதமொன்றின் மூலம் தமது உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அரசாங்கத்திற்கு மேலும் மூன்று மாற்றுத்திட்டங்களே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் வருமானத்தை விட செலவு அதிகம் என்பதால், அதனை அரசாங்கத்தாலும் நிதி வழங்கும் இரண்டு வங்கிகளாலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்தல் வெளி­யா­னது முதல் நேற்று வரை­யான காலப்­ப­கு­தியில் தேர்தல் சம்­பந்­தப்­பட்ட நான்கு முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்ளது.

குறித்த முறைப்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் இருவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். கடந்த 11 மற்றும் 12 ஆம் திக­தி­களில் வெலி­கே­பொல, பலாங்­கொடை, கம்­பஹா ஆகிய பொலிஸ் பிரி­வு­க­ளி­லேயே குறித்த முறைப்­பா­டுகள் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன எனவும் பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் குடியிருக்கும் காணியில் உள்ள கிணற்றில் இருந்து சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிணற்றில் இருந்து இரண்டு கிரனைட் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்காலில் மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும் அவை வெடித்த சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. ஆகவே, இறுதி யுத்தக்களமான இப்பகுதியில் மீண்டும் ஒரு தடவை வெடிபொருள் அகற்றும் பணி முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more

யாழ். காரைநகர் மடத்துவெளி மாதிரிக் கிராமத்தை, கடற்படையினர் ஆக்கிரமித்து உள்ளமையால், அப்பகுதிக்குக் கிடைக்கபெற்ற வீட்டுத்திட்டங்கள், சங்கானை, அராலி வீசிவளவு மாதிரிக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், மாவட்டத்துக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியில் 24 வீடுகள் அமைக்கும் திட்டம், தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குக் கிடைக்கப்பெற்றது. யாழ். மாவட்டத்துக்கான வீட்டுத் திட்டத்தில் கிடைக்கப்பெற்ற 24 வீட்டு திட்டத்தையும், காரைநகர் மடத்துவளவு மாதிரிக் கிராமத்துக்கு வழங்குவதற்கு, அரச அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். Read more

புத்தளம் மாவட்டத்துக்குட்பட்ட பூக்குளம் மீனவக் கிராம மக்கள், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பலவற்றை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். நான்கு தலைமுறைகளாக, தமது பூர்வீகக் கிராமத்தில் வாழ்ந்துவரும் இந்த மக்கள், போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். Read more

பல ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன், இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலேயே ஆணும் பெண்ணும் சமமான வாக்குரிமை இலங்கையில் பெற்றனர்.
ஆனால் 85 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் இலங்கையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் 5.8% ஆகவும் (உலக தர வரிசையில் நூற்றி எழுபத்தி ஏழாவது இடத்தில் இலங்கை உள்ளது: Source Inter-Parliamentary Union March 2016) உள்ளூராட்சி மன்றத்தில் 1.8 % ஆகவும் காணப்படுகின்றது. Read more

ஆண்டுக்கு ஒருமுறை மிகவும் தெளிவாக தெரியக்கூடிய விண்கல் மழையை இன்றிரவு (புதன்கிழமை) காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7 முதல் 17ஆம் தேதி வரையிலான காலப் பகுதியில் பெய்கின்ற ஜேம்னிட் என்ற விண்கல் மழையை இன்று இரவு (13-12-2017) கண்களால் நேரடியாக பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்குரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியினை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் ஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கான முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது. Read more