Header image alt text

நிலவும் வளிமண்டல குழப்பநிலை காரணமாக இன்றும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தென் மற்றும் தென்கிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 9 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணிவரை குறித்த 9 முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதற்கமைவாக, நேற்று பானம பிரதேசத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் 600 தென்னங்கன்றுகள் விநியோகிக்கபட்டதாகவும், குறித்த தென்னங்கன்றுகளை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். Read more

2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 520 இலங்கை ஏதிலிகள் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை முகவரகம் இந்தத் தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. 619 குடும்பங்களைச் சேர்ந்த குறித்த இலங்கை ஏதிலிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் தமிழகத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளதாக இலங்கை முகவரகம் குறிப்பிட்டுள்ளது. Read more

2017ஆம் ஆண்டில் முகநூல் தொடர்பில் 3ஆயிரத்து 400முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார். முகநூலில் புகைப்படங்களை மாற்றுவது தொடர்பிலேயே அவற்றுள் பெரும்பாலான முறைப்பாடுகள் ஆகும். Read more

வட கிழக்கு பருவப்பெயர்ச்சியினால் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்நிலையில், நேற்றுமுதல் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மன்னார் – மாந்தை மேற்கு, தேவன்பிட்டி கிராமத்தில் நேற்றுமாலை வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன. இதன்போது, 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வை.எம்.எஸ் தேசப்பிரிய குறிப்பிட்டார். Read more

1951ம் ஆண்டு 24ம் இலக்க துப்பாக்கி சூட்டு மைதானம் மற்றும் இராணுவ பயிற்சி சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் காட்டு யானை தொகை மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து

ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபையின் களப்பணியாளர்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொள்வது தொடர்பில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read more

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் கட்டுப்பணங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறும் என தேர்ல்கள் ஆனைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்திருந்தார். Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 20 முறைப்பாடுகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் மத்திய நிலையத்திற்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன.

நேற்று தேர்தலுடன் தொடர்புடைய இரண்டு முறைப்பாடுகள் பதிவாகியதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளித்தமை மற்றும் கட்டவுட், போஸ்டர்களை காட்சிப்படுத்தியமையுடன் தொடர்புடையவையாகும். இதனிடையே தேர்தலுடன் தொடர்புடைய 32 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் பெப்ரலின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். Read more

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் 98 சதவீதமான கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பாவனை, கையிருப்பு, உற்பத்தி மற்றும் மாற்றல் மீதான தடை மற்றும் அவற்றின் அகற்றல் தொடர்பான சாசனத்தின் அரசு தரப்பினரின் 16ஆவது கூட்டம் ஒஸ்ட்ரியாவின் வியன்னா நகரில் நடைபெற்றது. இதில் இலங்கை சார்பில் அறிக்கையை முன்வைத்த ஒஸ்ட்ரியாவுக்கான தூதுவர் எச்.ஈ. ப்ரியாணி விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார். Read more